நாட்டில் நடந்த சாலை விபத்துகளில் சிறுவர்கள் வாகனங்களை இயக்கி ஏற்படுத்திய விபத்துகளில் தமிழகம் முதலிடத்தில் இருக்கிறது என்று மத்திய அரசு நாடாளுமன்றத்தில் தெரிவித்த புள்ளிவிவரங்களில் ஏராளமான முரண்பாடு இருக்கிறது என தமிழக போலீஸார் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரில் மாநிலங்களைவையில் மத்திய சாலைப் போக்குவரத்து துறை அமைச்சர் நிதின் கட்கரி பேசுகையில் “தேசிய அளவில் சிறுவர்கள் ஏற்படுத்திய விபத்துகளில் தமிழகத்தில் அதிகமாக நடந்துள்ளன. ஒட்டுமொத்தமாக 11,890 விபத்துகள் நடந்ததில் தமிழகத்தில் மட்டும் 2063 விபத்துகள் நடந்துள்ளன. 36 மாநிலங்கள் மற்றும்யூனியன் பிரதேசங்கள் இணைந்துள்ள ஒருங்கிணைந்த சாலை விபத்துகள் புள்ளிவிவரங்கள் அடிப்படையில் இதைத் தெரிவித்தேன். தமிழகத்தைத் தொடர்ந்து மத்தியப் பிரதேசத்தில் 1,138 விபத்துகளும், மகாராஷ்டிராவில் 1067 விபத்துகளும் நடந்தன”எ னத் தெரிவித்தார்.
இதையும் படிங்க: டோல்கேட் கட்டணம்: ஒரே வாரம்தான்… நிதின் கட்கரி மாபெரும் அறிவிப்பு..!

ஆனால், மத்திய அமைச்சர் நிதின் கட்கரி தெரிவித்த புள்ளிவிவரங்களுக்கும், தமிழக போலீஸார் உண்மையில் பதிவு செய்த விபத்து வழக்கிற்கும் ஏராளமான முரண்பாடுகள் இருக்கின்றன. மத்திய அரசு எடுத்த அதே ஐஆர்டிஏ முறையை ஆய்வு செய்தபோது, தமிழக்தில் சிறார்கள் ஏற்படுத்திய விபத்துகளில் 2023 மற்றும் 2024ம் ஆண்டில் மொத்தம் 473 விபத்துகள் பதிவாகியுள்ளன.
சிறார்கள் விபத்துகள் ஏற்படுத்திபின், அவர்களின் பாதுகாவலர் அல்லது பெற்றோருக்கு மட்டும் 2023ல் 41 சலான்களும், 2024ல் 80 சலான்களும் போலீஸார் தரப்பில் வழங்கப்பட்டுள்ளன. பீகாரில் மட்டும் 1,316 சலான்கள் வழங்கப்பட்டு அதன் மூலம் ரூ44.27 லட்சம் வசூலிக்கப்பட்டுள்ளது.
தமிழக போலீஸின் போக்குவரத்து மற்றும் சாலைப்பாதுகாப்பு பிரிவில் உள்ள மூத்த அதிகாரி ஒருவர் கூறுகையில் “ வழக்கமாக விபத்துகள், குற்றவழக்குகள் ஆகியவை மத்திய அரசின் ஐஆர்ஏடி முறையில் பதிவேற்றம் செய்யப்படும், மாநில குற்ற ஆவணப்பதிலும் பதிவு செய்யப்படும். அதன்படி மாநில குற்றஆவணப் பிரிவில் 2023ம் ஆண்டில் 203 விபத்துகளும், 2024ம் ஆண்டில் 269 விபத்துகளும் சிறார்கள் வாகனத்தை இயக்கியதால் ஏற்பட்டுள்ளது.

ஆனால், 200 விபத்துகள் எங்கிருக்கிறது, 2000 விபத்துகள் எங்கிருக்கிறது. இரண்டுக்கும் இடையே 100 மடங்கு முரண்பாடு இருக்கிறது. ஐஆர்ஏடி செயல்முறையில் வெளிப்படைத்தன்மை இல்லை. ஒருமுறை குற்ற புள்ளிவிவரங்கள் பதிவு செய்துவிட்டால், அதை மாநிலங்கள் சரி செய்ய ஏதும் வழியில்லை, திருத்தவும் முடியாது. தமிழக அரசைப் பொருத்தவரை விபத்துகள் ஏதேனும் நடந்தால் அதில் 90 சதவீதத்தை உடனுக்குடன் பதிவேற்றம் செயல்முறையை வைத்துள்ளது.
தமிழகத்தைப் பொருத்தவரை சாலை விபத்துகளில் உயிரிழப்போரின் எண்ணிக்கை ஜனவரி மற்றும் பிப்ரவரியில் 17% குறைந்துவிட்டது. 2,576 விபத்துகள் நடந்ததில் அதில் 2,678 பேர் பலியாகியுள்ளனர். இது கடந்த 2024ம் ஆண்டோடு ஒப்பிடுகையில் 3110 விபத்துகளில் 3253 பேர் உயிரிழந்திருந்தனர்.

விபத்துகளில் உயிரிழப்பு தடுக்கப்பட்டு, குறைக்கப்பட்டது என்பது கூடுதலாக விழிப்புணர்வு, அதிகமான யூடர்ன், கண்காணிப்பு கேமிரா, மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்துதல் ஆகியவற்றால் குறைந்துள்ளது” எனத் தெரிவித்தார்.
அது மட்டுமல்லாமல் இந்தியாவிலேயே தமிழகத்தில்தான் தலைக்கவசம் அணியாமல் இருசக்கரம் வாகனம் ஓட்டினாலோ, சீட் பெல்ட் அணியாமல் வாகனம் இயக்கினாலோ ஓட்டுநர் உரிமத்தை சஸ்பெண்ட் செய்யும் கொள்கையை வைத்துள்ளது. உச்ச நீதிமன்றம் அமைத்த சாலைபாதுகாப்புகமிட்டி அளித்த பரிந்துரைகளை தமிழக அரசு கடைபிடித்து வருகிறது என அந்த அதிகாரி தெரிவித்தார்.
இதையும் படிங்க: நம்புங்கள்… தனது தொகுதியின் கழிவு நீரை விற்று ரூ.300 கோடி வருமானம்... ஆச்சரியப்படுத்திய நிதின் கட்கரி