தருமபுரி பழைய நீதிமன்ற வளாகத்தில் சமரச தீர்வு மைய தினத்தை முன்னிட்டு விழிப்புணர்வு பேரணியை மாவட்ட முதன்மை நீதிபதி திருமகள் கொடியசைத்து இன்று தொடங்கி வைத்தார். உயர் நீதிமன்றம் மற்றும் மாவட்ட நீதிமன்றங்களில் உள்ள சமரச மையம் குறித்த விழிப்புணர்வை பொதுமக்களிடம் ஏற்படுத்தும் வகையில் இப்பேரணி நடைபெற்றது.

அனைத்து மாவட்ட நீதிமன்றங்களிலும் சமரச மையங்கள் செயல்பட்டு வருகின்றன. நிலுவையில் உள்ள வழக்குகளை நேரடியாகவோ அல்லது வழக்கறிஞர் மூலமாகவோ சமரச மையத்திற்கு அனுப்பக் கூறலாம். அனைத்து மையங்களிலும் உள்ள பயிற்சி பெற்ற சமரசர்கள் சமரச பேச்சுவார்த்தைக்கு ஏதுவாக அவர்களை வழிநடத்துவார்கள். சமரசர் முன்னிலையில் நீங்களே எதிர் தரப்புடன் நேரடியாக பேச்சுவார்த்தை நடத்தலாம். இதில் உங்கள் வழக்கறிஞரும் பங்கு கொண்டு உங்களுக்கு உதவலாம்.
இதையும் படிங்க: 100 ஆண்டுகள் பழமை வாய்ந்த கோயிலுக்கு நடைபெற்ற பாலாலயம்.. நீதிமன்ற உத்தரவையும் மீறி சலசலப்பு.. அதிரடி காட்டிய போலீசார்!

சமரசம் ஏற்படவில்லை என்றால் நீங்கள் உங்கள் வழக்கை நீதிமன்றத்தில் தொடரலாம். எனவே இதுகுறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் கல்லூரி மாணவிகள் விழிப்புணர்வு பதாகைகளை ஏந்தி எஸ்வி ரோடு வழியாக இன்று ஊர்வலமாகச் சென்றனர். விழிப்புணர்வு பேரணியில் மாவட்ட நீதிபதிகள், வழக்கறிஞர்கள், கல்லூரி மாணவிகள் தன்னார்வலர்கள், தனியார் தொண்டு நிறுவனத்தினர் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
இதையும் படிங்க: சீனாவில் பெருமை பீற்றிய யூனுஸ்… மரண இடியை இறக்கிய இந்தியா..!