தருமபுரி மாவட்டம் பாலக்கோடு அடுத்த கெண்டேயணஹள்ளி கிராமத்தில் பெட்டமுகலாளம் மலை உள்ளது. இந்த பெட்டமுகலாளம் மலை அடிவாரத்தில் கடந்த 40 ஆண்டுகளுக்கும் மேலாக அணைக் கட்ட வேண்டும் என்ற கோரிக்கையை அம்மக்கள் விடுத்து வருகின்றனர்.
இந்த நிலையில், வருகிற மார்ச் 22ஆம் தேதி உலக தண்ணீர் தினத்தை முன்னிட்டு மார்ச் 23ஆம் தேதி தமிழ்நாடு முழுவதும் கிராம சபைக் கூட்டம் நடத்த வேண்டும் எனத் தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது.
இந்த கிராம சபைக் கூட்டத்தில் தருமபுரி மாவட்ட ஆட்சியர் சதீஷ் கலந்து கொண்டால், அணை கட்டுவது குறித்த தங்களது நீண்ட நாள் கோரிக்கை நிறைவேறும் என்ற நம்பிக்கையில் கிராம மக்கள் உள்ளனர்.

இதையடுத்து கெண்டேயணஹள்ளி கிராம மக்கள் இன்று தருமபுரி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்குப் பூரண கும்பம் மற்றும் தட்டில் பழங்களுடன் சென்று மாவட்ட ஆட்சியரிடம் மனு கொடுத்து கிராம சபைக் கூட்டத்தில் பங்கேற்க அவருக்கு அழைப்பு விடுத்தனர். இதுகுறித்து அப்பகுதியைச் சேர்ந்த மக்கள் கூறுகையில் , "அனைத்து கிராம ஊராட்சிகளிலும் மார்ச் 23ஆம் தேதி கிராம சபைக் கூட்டம் நடைபெறுகிறது.
இதையும் படிங்க: என் பொறுமையைச் சோதிக்காதீங்க... கடுப்புடன் காவல்துறையை எச்சரித்த அண்ணாமலை..!
கடந்த சில ஆண்டுகளாக எங்கள் ஊராட்சியில் கிராம சபைக் கூட்டம் முறையாக அதிகாரிகளுடன் நடைபெறுவதில்லை. ஆனால் இந்த கிராம சபைக் கூட்டம் கெண்டேயணஹள்ளி ஊராட்சியில் முறையாக நடக்க வேண்டும். அனைத்துத் துறை அதிகாரிகளும் கிராம சபைக் கூட்டத்திற்கு வருகை தந்து அதனை முறையாக நடத்த மாவட்ட ஆட்சியரிடம் மனு கொடுத்து பூர்ண கும்ப கலசத்துடன் அவருக்கும் அழைப்பு விடுத்துள்ளோம்" என்றனர்.
இதையும் படிங்க: நான் என்ன விஜய்யை போல் நடிகையின் இடுப்பை கிள்ளியா அரசியல் செய்கிறேன்..? அண்ணாமலை ஆவேசம்..!