கும்பகோணம் சேஷம்பாடி கிராமத்தில் 2000 குடியிருப்புகள் கட்டுவதற்கான திட்டம் தொடங்கப்பட்டது. குறிப்பாக கும்பகோணம் நகரில் பல்வேறு நீர்நிலை ஆக்கிரமிப்புகளில் இருந்த வீடுகள் அப்புறப்படுத்தப்பட்டன. வீடுகளை இழந்தவர்களுக்கு புதிய வீடு ஒதுக்கீடு செய்யப்பட்டு இருக்கிறது. இந்த நிலையில் இன்று கலைஞர் நினைவு இல்ல திட்டத்தின் கீழ் 261 பயனாளிகளுக்கு கட்டடம் கட்டுவதற்கான ஆணைகளை உயர்கல்வித்துறை அமைச்சர் கோவிச்செழியன் வழங்கினார்.

அந்த நிகழ்ச்சியில் பேசிய திமுக எம்.பி கல்யாணசுந்தரம் எல்லாவற்றிற்கும் அவசரப்படக்கூடாது, கல்யாணம் முடிந்து பத்து மாதம் பிறகுதான் குழந்தை பிறக்கும்., திருமணம் ஆனவுடன் குழந்தை பிறந்தால் அது வேறு மாதிரியாக தான் இருக்கும் என ஆபாச தோனியில் பேசி இருந்தார். திட்டங்கள் நிறைவுபெற நேரம் எடுக்கும் என்பதை கூறுவதற்கு இவ்வளவு கீழ்த்தரமாக பேசியது அங்கிருந்த மக்களை முகம் சுழிக்க வைத்தது. இது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது.
இதையும் படிங்க: பட்டை, நாமம்… சமாதியில் கோபுரம்… கொஞ்சம்கூட சூடு சொரணை இல்லையா..? இளம்பெண் நறுக் சுருக்..!

ஏற்கெனவே மத குறியீடுகள் பற்றி அமைச்சர் பொன்முடி பேசியது சர்ச்சையை ஏற்படுத்தியது. மேலும், மாற்றுதிறனாளிகள் தொடர்பாக அமைச்சர் துரைமுருகன் பேசியதும் பேசுப்பொருளாக மாறியது. நேற்று நடந்த அமைச்சரவை கூட்டத்தில், அமைச்சர்களுக்கு சர்ச்சை பேச்சு சம்பவங்கள் குறித்து அறிவுரைகளை முதலமைச்சர் ஸ்டாலின் வழங்கியதாக தகவல் வெளியானது. அதற்குள்ளேயே, திமுக எம்.பி கல்யாணசுந்தரத்தின் இந்த ஆபாச பேச்சு மீண்டும் திமுகவை சர்ச்சையில் சிக்க வைத்துள்ளது.
இதையும் படிங்க: சாட்டையை சுழற்றிய ஸ்டாலின்... திமுக அமைச்சர்களுக்கு பறந்த அதிரடி உத்தரவு!