சென்னை சேப்பாக்கத்தில் உள்ள பத்திரிக்கையாளர் மன்றத்தில் அரசு மருத்துவர்களுக்கான சட்டப்போராட்டக் குழு சார்பில் செய்தியாளர்கள் சந்திப்பு நடைபெற்றது. அப்போது அக்குழுவின் தலைவர் மருத்துவர் பெருமாள் பிள்ளை செய்தியாளர்களிடம் பேசினார்.

அப்போது, அரசு மருத்துவமனைகளில் நோயாளிகளின் எண்ணிக்கைக்கு ஏற்றார்போல் மருத்துவர்கள் நியமனம் செய்யப்பட வேண்டும் என்றும் நாடு முழுவதும் எய்ம்ஸ் மருத்துவர்களுக்கு இணையான ஊதியம் அரசு மருத்துவர்களுக்கு தரப்பட வேண்டும் எனவும் வலியுறுத்தினார்.
இதையும் படிங்க: நடுராத்திரியில் நாங்க ஏன் சுடுகாட்டுக்கு போகணும்?- முதல்வர் ஸ்டாலின்

தேசிய மருத்துவ ஆணையம் அறிவுறுத்திய பிறகும் தமிழக அரசு அதனை செயல்படுத்தவில்லை எனக் கூறிய அவர், தற்போது தமிழகம் முழுவதும் முதல்வர் மருந்தகம் தொடங்கப்பட்டுள்ளது., இருப்பினும் அரசு மருத்துவர்களை தொடர்ந்து தங்கள் ஊதியத்திற்காக போராட வைக்க கூடாது என கூறினார்.எனவே இந்தக் கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டும் எனக் கூறி மார்ச் 18ம் தேதி முதல் தமிழக முதல்வருக்கும், தேசிய மருத்துவ ஆணையத்துக்கும் மின்னஞ்சல் அனுப்பப்படும் என்றும் அதனை தொடர்ந்து மார்ச் மாதம் 19ம் தேதி பிற்பகல் 3 மணிக்கு சென்னை மருத்துவ கல்வி இயக்குநர் வளாகத்தில் தர்ணா போராட்டம் நடத்தப்படும் எனவும் அறிவித்துள்ளார்.

மேலும் ஜூன் 11ம் தேதி மேட்டூர் மருத்துவர் கல்லறையில் இருந்து சென்னை நோக்கி பாதயாத்திரை மேற்கொள்ள இருப்பதாகவும், எனவே தமிழக முதல்வர் உடனடியாக தலையிட்டு போராட்டத்திற்கு முன்னதாகவே மருத்துவர்களின் கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டும் என்றும் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
இதையும் படிங்க: 4வது நாளாக தொடரும் அனல் மின் நிலைய தொழிலாளர்கள் போராட்டம்.