நீலகிரி மாவட்டம் முழுவதும் இன்று தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு மற்றும் நீலகிரி மாவட்டம் அனைத்து சங்கத்தின் கூட்டமைப்பு சார்பில் தற்பொழுது நடைமுறைப்படுத்தப்பட்டுள்ள இ பாஸ் நடைமுறையை முற்றிலுமாக ரத்து செய்ய கோரிக்கைவைத்தும் 12 அம்ச கோரிக்கைகளை முன்வைத்து 24 மணி நேர கடையடைப்பு போராட்டம் நடைபெற்று வருகிறது.

நீலகிரி மாவட்டத்திற்குள் இருக்கக்கூடிய சுற்றுலா தலங்கள் போன்ற இடங்களுக்கு வெளி மாநிலம் மற்றும் மாவட்டங்களில் இருந்து அதிக அளவில் சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர். இதனால் இப்பகுதியில் இயற்கை பாதிப்புகள் மற்றும் போக்குவரத்து நெரிசலானது அதிகரித்து காணப்பட்டு வருகிறது இதை கட்டுப்படுத்துவதற்காக ஏற்கனவே இ-பாஸ் முறையானது நடைமுறைப்படுத்தப்பட்டு அமலில் இருந்த நிலையில் வெளி மாநிலம் மற்றும் மாவட்டங்களில் இருந்து வரக்கூடிய வாகனங்கள் அனைத்தும் இ பாஸ் இருந்தால் மட்டுமே நீலகிரி மாவட்டத்திற்குள் அனுமதிக்கப்பட்ட வருகிறது .
இதையும் படிங்க: இன்று நள்ளிரவு முதல் ஜூன் மாதம் வரை... நீலகிரியில் அமலாகிறது புதிய கட்டுப்பாடு...!

இந்நிலையில் தற்பொழுது சென்னை உச்சநீதிமன்றம் உத்தரவின்படி நேற்று முதல் ஜூன் மாதம் இறுதி புதிய கட்டுப்பாடுகளுடன் இ-பாஸ் நடைமுறை கொண்டுவரப்பட்டுள்ளது. இதில் வார நாட்களில் 6000 வாகனங்களும் வார இறுதி நாட்களில் 8000 வாகனங்கள் மட்டுமே நீலகிரி மாவட்டத்திற்குள் அனுமதிக்க படும் எனவும் அறிவித்துள்ளனர்.
இந்த இ பாஸ் நடைமுறையை முற்றிலுமாக ரத்து செய்ய வேண்டும் என கூறி கூடலூர் ,பந்தலூர் ,உதகை, குன்னூர் என நீலகிரி மாவட்டம் முழுவதும் இன்று கடையடைப்பு போராட்டமானது நடைபெற்று வருகிறது. குன்னூர் நகரில் மட்டும் சுமார் 3000 கடைகள் அடைக்கப்பட்டுள்ளன.

அதுமட்டுமின்றி 12அம்ச கோரிக்கைகளான புதிதாக அமைக்கப்பட்டுள்ள இ பாஸ் நடைமுறையை முற்றிலுமாக ரத்து செய்ய வேண்டும் ,தேயிலை விவசாயிகளின் பசுவும் தேயிலைக்கு குறைந்தபட்சம் விலை நிர்ணயம் செய்ய வேண்டும், கூடலூர் மக்களின் நீண்ட கால பிரச்சனையான செக்சன் 17 நிலத்திற்கு தீர்வு வழங்க வேண்டும், வனவிலங்குகளிடமிருந்து பகுதி மக்களுக்கு பாதுகாப்பு அளிக்க வேண்டும் ,பிளாஸ்டிக் தடை சட்டத்திற்கு முறையாக மாற்று ஏற்பாடு செய்து தர வேண்டும் போன்ற 12 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி இன்று 24 மணி நேர கடையடைப்பு போராட்டம் ஆனது நடைபெற்று வருகிறது.
தொடர்ந்து தொடர்ந்து கேரளா மற்றும் கர்நாடக மாநிலத்தில் இருந்து வரக்கூடிய சுற்றுலாப் பயணிகள் இந்த கடை அடைப்பால் பெரிதும் பாதிப்பிற்கு உள்ளாகியுள்ளனர் .
இதையும் படிங்க: ஸ்தம்பிக்கப்போகும் நீலகிரி... ஏப்ரல் 2ம் தேதி நடக்கப்போகும் அதிரடி.. வணிகர்கள் சங்கம் கொந்தளிப்பு...!