சட்டம் ஒழுங்கு சரியில்லை என எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டி வரும் நிலையில், என்கவுண்டர்கள் அதிகரித்துள்ளது விவாதங்களை ஏற்படுத்தியது. இதுகுறித்து கருத்து தெரிவித்த அமைச்சர் ரகுபதி, தப்பித்து செல்லும் ரவுடிகளை சுட்டுப் பிடிக்க வேண்டிய நிலை ஏற்பட்டுவிடுகிறது., தவிர்க்க முடியாத சூழலில், என்கவுண்டர் செய்துதான் ஆக வேண்டும்., இல்லையெனில் ரவுகளை தப்பிக்க விட்டுவிட்டனர் என்று தமிழக அரசு மீது பழிபோடுவார்கள் என கூறி இருந்தார்.

இந்த நிலையில் மதுரை ரவுடி வெள்ளைக்காளியை போலீசார் என்கவுண்டர் செய்ய வாய்ப்புள்ளதாக கூறி அவரது சகோதரி உயர் நீதிமன்ற மதுரை கிளையில் வழக்கு தொடுத்துள்ளார். இந்த வழக்கை விசாரித்த நீதிபதி, போலீசாரின் பாதுகாப்புக்கு தான் துப்பாக்கி வழங்கப்பட்டுள்ளது., என்கவுண்டர் செய்வதற்கு அல்ல என கூறினார்.
இதையும் படிங்க: சத்தீஸ்கர் என்கவுன்ட்டர்: 16 மாவோயிஸ்ட்களை வேட்டையாடியது பாதுகாப்புப் படை..!

காவல்துறையினர் சட்டத்தை கையில் எடுத்துக் கொள்கின்றனர் என்று கூறிய நீதிபதி அவசியம் இருந்தால் காலுக்கு கீழே சுட்டுப் பிடியுங்கள் என கூறினார். சமீபகாலமாக தமிழகத்தில் என்கவுண்டர் சம்பவங்கள் அதிகரித்து வருவதாக கருத்து தெரிவித்தார்.
இதையும் படிங்க: மாபெரும் வெற்றி... ஜம்மு-வில் 4 நாட்களில் 30 கி.மீ சுற்றி வளைப்பு: 2 பயங்கரவாதிகள் பலி..!