ஈரோட்டில் இருந்து ஜோலார்பேட்டை வரை சொல்லக்கூடிய வாராந்திர ரயில் குறிப்பிட்ட சில நாட்களுக்கு திருப்பத்தூர் வரை மட்டுமே செல்லும் என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. இது குறித்து தெற்கு ரயில்வே சேலம் கோட்டம் சார்பில் வெளியிடப்பட்ட செய்தி குறிப்பில், ஜோலார்பேட்டை திருப்பத்தூர் மார்க்கத்தில் தண்டவாளம் மற்றும் சிக்னல் மேம்பாட்டு பணிகள் நடைபெற்று வருவதனால், இந்த மார்க்கத்தில் இயங்கும் சில ரயில்களின் இயக்கம் குறிப்பிட்ட சில நாட்களுக்கு மாற்றப்பட்டுள்ளது.

அதன்படி ஈரோடு - ஜோலார்பேட்டை வழித்தடத்தின் வாராந்திர ரயிலானது வருகின்ற 29, 30 ஆகிய தேதிகளில் ஈரோட்டில் இருந்து சேலம் வழியாக திருப்பத்தூர் வரை மட்டுமே இயக்கப்படும். திருப்பத்தூர் ஜோலார்பேட்டை இடையே ஒரு பகுதியானது ரத்து செய்யப்பட்டுள்ளது. அதேபோன்று மறுமார்க்கத்தில் ஜோலார்பேட்டையில் இருந்து ஈரோடு செல்லும் ரயிலானது வருகின்ற 29, 30 ஆகிய தேதிகளில் ஜோலார்பேட்டை திருப்பத்தூர் இடையே ரத்து செய்யப்படுகிறது. இதன் காரணமாக அந்த ரயில் திருப்பத்தூரில் இருந்து புறப்பட்டு சேலம் வழியாக ஈரோடு சென்றடையும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: யூஸ் பண்ணிக்கோங்க மக்களே.. ஹோலி பண்டிகை முன்னிட்டு சிறப்பு ரயில் சேவை அறிவிப்பு..
இதையும் படிங்க: தொடரும் அராஜகம்.. ராமேஸ்வர மீனவர்கள் 7 பேரை விடுவித்து 11 பேரை கைது செய்த இலங்கை கடற்படையினர்..