திருமலை நாயக்க மன்னர்களின் ஆட்சி மற்றும் புகழை பறைசாற்றும் வகையில் மதுரையில் திருமலை நாயக்கரின் மஹால் அமைய பெற்று மன்னரின் கேடயங்கள், பொருட்கள், சிலைகள் என அனைத்தும் பாதுகாக்கப்பட்டு வருகின்றன. குறிப்பாக அவரது இருக்கை உள்ளிட்ட பல்வேறு அரிதான பொருட்கள் இன்றளவும் பெரும் மதிப்புடன் பாதுகாக்கப்பட்டு வருகின்றன.

மேலும் இங்கு சுற்றுலா பயணிகளின் வருகையை அதிகரிக்கும் நோக்கில் திருமலை நாயக்க மன்னர்களின் வரலாறு காட்சிகளும் அவ்வப்போது ஒளிப்பதிவு செய்யப்பட்டு அரங்கேற்றப்பட்டு வந்தன. தற்போது இதற்கு அடுத்த கட்டமாக மக்கள் நாயக்க மன்னர்களின் வரலாற்றை நான்கு அறிந்து கொள்வதற்காகவும் அவர்களின் பெருமையை பறைசாற்றுவதற்காகவும் புதிய லேசர் லைட்டிங் நிகழ்ச்சி அமைக்கப்படும் என அமைச்சர் ராஜேந்திரன் அறிவித்திருந்தார்.
இதையும் படிங்க: ‘முதலில் புரிந்து கொள்ளுங்கள்’.. காங்கிரஸ் எம்.பி மீதான FIR ரத்து.. போலீஸாருக்கு உச்ச நீதிமன்றம் குட்டு..!

மதுரை மாவட்டத்தின் சுற்றுலாத்தலங்களில் ஒன்றாக விளங்கும் திருமலை நாயக்கர் மகாலுக்கு இளைஞர்கள், சுற்றுலாப் பயணிகள், பொதுமக்கள் என ஏராளமானோர் விடுமுறை மற்றும் விடுமுறை அல்லாத நாட்களிலும் திருமலை நாயக்கர் மகாலுக்கு சென்று நேரம் செலவிடுவதை வழக்கமாகக் கொண்டுள்ளனர். மேலும் சுற்றி பார்க்க செல்வோர் தூண்களில் அவர்களது பெயர் மற்றும் சுவர்களில் கிறுக்கல்களை விட்டுச் செல்வதனால் மகால் முழுவதும் கிறுக்கல் படிந்து காணப்பட்டது. இதனை சீரமைக்க மாநகராட்சி திட்டமிட்டது. அதன்படி சீரமைப்பு பணிகள் தற்போது நடைபெற்று வருகிறது.

கடந்த 2023 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதத்தில் துவங்கிய புதுப்பிக்கும் பணி நவம்பர் 2024 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் முடிவடையும் என எதிர்பார்க்கப்பட்டிருந்த நிலையில், தற்போது வரை பணியானது தொடர்ந்து நடைபெற்று வருகிறது. தற்போது நாடக சாலையில் உள்ள 24 வட்ட தூண்கள் புதுப்பிக்கப்பட்டு, அவற்றின் சுவர்களும் சேர்த்து செந்நிறம் பூசப்பட்டுள்ளது. அதனை அடுத்து பள்ளியறையிலும் வேலை நடந்து வருவதுதனால் தூண்களின் மீது தூசி படியாமல் இருக்க பிளாஸ்டிக் கவரால் ஒவ்வொரு தூணும் முழுமையாக மூடப்பட்டுள்ளது.

பள்ளியறையில் உள்ள 12 சதுர தூண்களின் கீழ் பகுதியில் லைட்டிங் அமைப்பதற்கான ஒயரிங் வேலைகள், பின்னர் தரைத்தளம் அமைப்பு, நூலகம் புதுப்பிக்கும் பணி என சுமார் 10 கோடிக்கும் மேலான மதிப்பீட்டில் செலவு செய்யப்பட்டு புதுப்பிக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன. இந்த நிலையில் திருமலை நாயக்கர் மஹால் 10 கோடிக்கும் மேல் செலவு செய்து புதுப்பிக்கப்பட்டு வருவதனால் இளைஞர்கள் அல்லது மகாலை சுற்றி பார்ப்பவர்கள் யாரேனும் சுவர்கள் அல்லது தூண்களில் கிறுக்கினால் ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்படும் என மஹால் நிர்வாகம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
இதையும் படிங்க: உயர் ரக போதை பொருள், மதுபானங்கள் விற்பனை.. எஸ்.ஐ மகன் உட்பட 7 பேர் கைது..!