காட்டுத்தீ தொடங்குவதற்கான நான்கு முக்கியமான இயற்கைக் காரணங்கள், மின்னல், எரிமலை வெடிப்பு, பாறைகள் விழுவதனால் ஏற்படும் தீப்பொறி, தானாகத் தீப்பற்றுதல் ஆகியன. உலகம் முழுவதிலும் எரிந்துகொண்டிருக்கும் ஆயிரக்கணக்கான நிலக்கரிச் சுரங்கத் தீயினாலும் அருகில் உள்ள எரியக்கூடிய பொருட்களைத் தீப்பற்றச் செய்து காட்டுத்தீயை ஏற்படுத்தக் கூடும். ஆனாலும், பல காட்டுத்தீக்கள் ஏற்படுவதற்கு மனிதருடைய நடவடிக்கைகள் தான் காரணமாக இருக்கின்றன.

காய்ந்த மரங்களும், செடிகளும் அதிக வேகத்தில் உராய்வதனாலும் காட்டுத்தீ பற்றுகிறது. கோடை காலம் மற்றும் அதிக வெய்யில் காலங்களில் காட்டித்தீ அதிகமாக பிடிக்கின்றது.அதுவும் அமெரிக்காவில் பல இடங்களில் காட்டுத்தீ அடிக்கடி ஏற்படலாம், குறிப்பாக வறட்சியின் போது, மேற்கு அமெரிக்கா மற்றும் புளோரிடாவில் இது மிகவும் பொதுவானது. காட்டுத்தீயால் ஆண்டுதோறும் எரிக்கப்படும் சராசரி அமெரிக்க ஏக்கர் பரப்பளவு மூன்று தசாப்தங்களில் கிட்டத்தட்ட மூன்று மடங்காக அதிகரித்துள்ளது.
இதையும் படிங்க: ஹமாஸுக்கு ஆதரவு தெரிவித்ததாக இந்திய மாணவர் கைது.. அதிபர் ட்ரம்ப் அதிரடி உத்தரவு..!

இந்த நிலையில், புளோரிடாவில் காட்டுத்தீ பரவி வருகிறது. இதனால் மக்களை பாதுகாப்பான இடத்திற்கு வெளியேற்றும் பணியில் அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர்.தெற்கு அமெரிக்காவின் சில பகுதிகளில், வறண்ட வானிலை மற்றும் பலத்த காற்று காரணமாக காட்டுத்தீ பரவி வருகிறது.

டெக்சாஸில், ஹூஸ்டனுக்கு அருகில் உள்ள தேசிய வனப்பகுதியில் ஏற்பட்ட காட்டுத்தீயால் 900 வீடுகளில் வசித்த மக்களை காலி செய்ய வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. இதனால் பள்ளிகள் மூடப்பட்டுள்ளன. மேலும், அப்பகுதியில் 3.1 சதுர மைல் பரப்புக்கு காட்டுத்தீ பற்றி எரிந்து முற்றிலும் நாசமாக்கி விட்டது. விலங்குகள், கால்நடைகள் மற்றும் மக்களை பாதுகாக்க தீயணைப்பு வீரர்களும் போராடி வருகின்றனர்.

வீடுகளை விட்டு வெளியேற்றப்படும் மக்கள் பாதுகாப்பாக இருக்கவும் அறிவுறுத்தப்பட்டு உள்ளது. மேலும், தீயினால் பாதிக்கப்பட்ட 115 ஆண்டுகள் பழமையான செயிண்ட் ஜோசப் கட்டத்தின் கூரையும் இடிந்து விழுந்தது. டெக்சாஸ் வடக்கு பன்ஹான்டில் முதல் கிழக்கு கடற்கரை வரை காட்டுத்தீயால் மிகுந்த பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
இதையும் படிங்க: வாக்குறுதி நிறைவேற்றப்பட்டது.. விண்வெளி வீரர்களை மீட்ட மகிழ்ச்சியில் அமெரிக்க வெள்ளை மாளிகை..!