கோவை மாவட்டம் அன்னூர் மற்றும் அதன் சுற்று வட்டார கிராமங்களில் பிரதான தொழிலாக விவசாயம் அமைந்து உள்ளது. விவசாயத்தை தவிர்த்து அப்பகுதியில் பிரதான தொழிலாக பார்க்கப்படுவது ஆடு மாடு கோழி வளர்ப்புகளே.
அன்னூர் ஆட்டு சந்தையானது கோவை மாவட்டம் மட்டுமின்றி தமிழகம் முழுவதும் பிரபலமான சந்தையாகும். அன்னூரில் வாரந்தோறும் சனிக்கிழமை நாளன்று நடைபெறும் சந்தையில் ஆடு, மாடு மற்றும் கோழிகளை விற்பனை செய்வதற்கு சுற்றுப்புற கிராமங்களில் உள்ள விவசாயிகள் கொண்டு வருவது வழக்கம். வாரந்தோறும் நடைபெறும் சந்தையில், ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஆடுகள் மற்றும் கால்நடைகள் விற்பனை செய்யப்படுகின்றன.

இந்த நிலையில், இன்று நடைபெற்ற சந்தையில் அன்னூர் மற்றும் அதன் சுற்று வட்டாரப் பகுதிகளில் இருந்து ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஆடுகள் விற்பனைக்காக கொண்டு வரப்பட்டன. ரம்ஜான் பண்டிகை நெருங்கி உள்ள நிலையில், வியாபாரிகள் ஆடுகளை போட்டி போட்டுக்கொண்டு வாங்கிச் சென்றனர். குறிப்பாக கோவை, ஈரோடு, திருப்பூர், நீலகிரி மாவட்டங்களிலிருந்தும் கர்நாடகா, கேரள மாநிலங்களில் இருந்தும் ஏராளமான வியாபாரிகள் ஆடுகளை வாங்கிச் சென்றனர்.
இதையும் படிங்க: ரமலான் எதிரொலி.. மணப்பாறை ஆட்டு சந்தையில் ஆடுகள் வரத்து குறைவு.. ஆயிரம் ரூபாய் விலை போன ஆடுகள்..
சந்தையில் ஆட்டு குட்டிகள் ஆயிரம் ரூபாயில் இருந்து ரூ. 5 ஆயிரம் முதல் அதிகபட்சமாக ரூ. 20 ஆயிரம் வரையிலும் விற்பனை செய்யப்பட்டன.இன்று மட்டும் சுமார் ஒன்றரை கோடி ரூபாய்க்கு ஆடுகள் விற்பனையானதாக வியாபாரிகள் தெரிவித்தனர்.
இதையும் படிங்க: இது டிஜிட்டல் மயமாக்கம் அல்ல.. நிறுவன மயமாக்கப்பட்ட சுரண்டல்.. சாட்டையை சுழற்றும் மு.க.ஸ்டாலின்..!