வங்க கடலில் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தில் பல்வேறு இடங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. குறிப்பாக தென் மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு இருப்பதனால் பொதுமக்கள் பாதுகாப்பாக இருக்கவும் வலியுறுத்தியது.

இது குறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், வங்க கடல் பகுதிகள் வரை ஒரு வளிமண்டல கீழ் எடுக்க சுழற்சியும், குமரிக்கடல் பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல மேலடுக்க சுழற்சியும் தற்போது நிலவி வருகிறது. இதன் எதிரொலியாக கோவை, நீலகிரி, ஈரோடு, திருப்பூர், திண்டுக்கல் மற்றும் தேனி ஆகிய ஆறு மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்புள்ளதாக எச்சரிக்கை விடுத்துள்ளது.
இதையும் படிங்க: குடைய மறந்துராதீங்க மக்களே.. தென் மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு.. எச்சரித்த வானிலை ஆய்வு மையம்!

மேலும் தமிழகத்தில் ஒரு சில இடங்களிலும் புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. சென்னையில் பொறுத்தவரையில் அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடனும், நகரின் ஒரு சில இடங்களில் லேசான மலைக்கு வாய்ப்பு உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: தமிழகத்தில் மிதமான மழைக்கு வாய்ப்பு.. வானிலை ஆய்வு மையத்தின் அறிவிப்பு என்ன?