வங்கக் கடலில் கிழக்கு திசையில் ஏற்பட்டுள்ள சுழற்சியின் காரணமாக தமிழகத்தில் கடந்த சில தினங்களாக பல்வேறு மாவட்டங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்தது. குறிப்பாக தென் மாவட்டங்களில் மிக கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும் சென்னை வானிலை மாய மையம் எச்சரிக்கை விடுத்திருந்தது. அதன்படி மார்ச். 12 ஆம் தேதி வரையிலான நிலவரத்தின்படி, பல்வேறு பகுதிகளில் கனமழை பெய்துள்ளது.
இந்த நிலையில் இன்று முதல் அடுத்த 4 நாட்களுக்கு தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் வெப்ப நிலையானது மூன்று டிகிரி செல்சியஸ் அதிகரிக்க கூடும் என கணிக்கப்பட்டிருந்தது. இது குறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

பூமத்திய ரேகையை ஒட்டிய மேற்கிந்திய பெருங்கடல் மற்றும் அதை ஒட்டிய மாலத்தீவு முதல் தென்மேற்கு வங்கக்கடல் வரை ஒரு வளிமண்டல கீழடுக்க சுழற்சி நிலவி வரும் நிலையில் குமரி கடல் பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவி வருவதாகவும் ஆய்வு மையம் தகவல் தெரிவித்து இருந்தது.
இதையும் படிங்க: ரூ.8.36 லட்சம் கோடி மோசடி..! கிரிப்டோகரன்சி மோசடியாளர் இந்தியாவில் கைது..!
இதன் காரணமாக தமிழகத்தில் ஒரு சில இடங்கள் புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் இன்றும் லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும் மார்ச் 17ஆம் தேதி வரை இதே நிலை தொடர வாய்ப்புள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டிருந்தது.

மேலும் தமிழகத்தில் ஒரு சில பகுதிகளில் இன்று முதல் அடுத்த 4 நாட்களுக்கு இயல்பை விட வெப்பநிலை உயர வாய்ப்புள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து சென்னையை பொறுத்தவரையில் வானம் ஓரளவு மேகமூட்டமாக காணப்படும் என்றும் ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசான மலைக்கு வாய்ப்புள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: மராத்தியில் பேச மாட்டேன்.. ஏர்டெல் பெண் ஊழியர் அடாவடி.. மும்பையிலும் வெடித்தது தாய்மொழி சர்ச்சை..!