தமிழகத்தில் அதிகரித்து வந்த குழந்தை திருமணத்தை அடுக்கும் வகையிலும் குழந்தைகளுக்கு எதிரான வன்கொடுமைகளை தடுக்கவும் பல்வேறு சட்டங்கள் இயற்றப்பட்டன. அதில் ஒன்றுதான் குழந்தை திருமண தடுப்பு சட்டம். சட்டத்தின் மூலம் குழந்தை தருணம் திருமணம் நடைபெறும் குழந்தைகளுக்கு திருமணத்தை தடுக்கப்பெற்று அவர்களுக்கு மீண்டும் கல்வி அளிப்பதே இதன் முக்கிய நோக்கமாகும். இப்படி இவ்வாறு பல சட்டங்கள் இயற்றப்பட்ட நிலையில் தமிழகத்தில் படிப்படியாக குழந்தை திருமணங்களின் விகிதங்கள் படிப்படியாக குறைந்து வந்தன. ஆனாலும் இன்னும் சில கிராமங்களில் இந்த நிலை நீடித்து வருகின்றன. இதனை தடுக்கும் வகையில் போலீசார் மற்றும் அதிகாரிகள் தீவிர நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் கல்வி அறிவு குறைவாக உள்ள மாவட்டங்களில் அதிகாரிகள் பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.

இதன் முக்கிய காரணமாக பார்க்கப்படுகிறது பெண் குழந்தைகளின் சமூக வாழ்க்கை மட்டுமல்லாமல் அவர்களது அடிப்படை உடலியல் ஆரோக்கியமும் சேர்ந்து பாதிக்கப்படுவதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளன. ஏனெனில் ஒரு குழந்தையை இன்னொரு குழந்தையை பெற்றெடுக்கும் நிலைமை வந்து விடுவதால் பிறப்போகும் குழந்தை ஊட்டச்சத்து குறைபாடுகளுடன் பிறக்க நேரிடுவதாக அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். இது ஒரு புறம் இருக்க இந்த குறைபாடுடன் பெறக்கூடிய குழந்தைகள், பெண் சிசுக் கொலையில் நிறைவடைகின்றன. இதன் காரணமாக குழந்தை திருமணம் பெண் சிசுக்கொலை உள்ளிட்ட பல குற்றங்களுக்கு எதிராக செயல்படும் கல்வி அறிவில் பின் தங்கிய கிராமங்களில் தமிழக அரசு கூடுதல் கவனத்தையும் மக்களையும் செலுத்தி வருகிறது.
இதையும் படிங்க: காதலனின் வெறியாட்டம்.. காயத்தில் அலறி துடித்த குழந்தைகள்.. அதிரடி காட்டிய போலீஸ்...

அந்த வகையில் தான் கிருஷ்ணகிரியில் ஒரு குழந்தைக்கு திருமணம் நடந்துள்ளது. கிருஷ்ணகிரி மாவட்டத்தில் அரசு பள்ளி ஒன்றில் படிக்கும் எட்டாம் வகுப்பு மாணவிக்கு அவரது பெற்றோர் திருமணம் செய்து வைத்துள்ளனர். இதனை எடுத்து எட்டாம் வகுப்பு மாணவி அடுத்த நாளே பள்ளிக்கு கழுத்தில் தாலி யுடன் சென்றுள்ளார். இதனைக் கண்ட ஆசிரியர்கள் அதிர்ச்சி அடைந்து மாணவியிடம் விசாரித்துள்ளனர். அப்போது நம் மாணவியை தனக்கு 25 வயது நபருடன் திருமணம் நடந்திருப்பதாகவும் பெற்றோர்கள் நடத்தி வைத்ததாகவும் திரு ஆசிரியர்களிடம் தெரிவித்துள்ளார். இதுகுறித்து ஆசிரியர்களே சமூக நலத்துறை அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்துள்ளனர்.

சம்பவ இடத்திற்கு வரைந்த அதிகாரிகள் மாணவியரிடம் இது குறித்து விரைவாக விசாரித்துள்ளனர். தொடர்ந்து மாணவியின் பெற்றோர் மணமகன் மணமகன் என் குடும்பத்தார் உள்ளிட்டோர் உறவினர்கள் என அனைவரும் பள்ளிக்கு வரவழைக்கப்பட்டு விசாரணை மேற்கொள்ளப்பட்டது. இறுதியாக மணமகன் பெற்றோர் உட்பட ஐந்து பெயரையும் போலீசார் போக்சோவில் கைது செய்தனர். இது ஒரு புறம் இருக்க விராலிமலை அருகே வடக்கு காட்டுப்பட்டி பகுதியில் 17 வயது சிறுமிக்கு சமீபத்தில் பெற்றோர்கள் திருமணம் செய்து வைத்ததாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இந்த தகவலின் அடிப்படையில் சமூக நலத்துறை அதிகாரிகளுடன் சம்பவ இடத்திற்கு வரை இந்த போலீசார் விசாரணை மேற்கொண்டனர்.

அப்போது சம்பந்தப்பட்ட 17 வயது சிறுமிக்கு திருமணம் நடந்ததும் அந்த சிறுமி அப்போது இரண்டு மாத கர்ப்பமாக இருந்ததும் தெரிய வந்தது. இதைத்தொடர்ந்து போலீசார் மணமகன் உட்பட அவரது பெற்றோர் மற்றும் மனம் அச்சிறுமியின் பெற்றோர் என நான்கு பேர் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இதையும் படிங்க: ஜெயலலிதா உடன் பேச வாய்ப்பு கிடைத்தது எனது பாக்கியம்..! அதிர வைத்த மோடியின் திடீர் அறிக்கை..!