வக்ஃபு திருத்தச் சட்டத்தையொட்டி மேற்கு வங்கத்தின் முர்ஷிதாபாத்தில் நடந்த வன்முறையைச் சுட்டிக்காட்டி வங்கதேசம் பேசிய கருத்துக்கு இந்தியா தகுந்த பதிலடி கொடுத்தது. உங்கள் நாட்டில் உள்ள சிறுபான்மையினர் உரிமைகளை, நலன்களை பாதுகாத்துக்கொள்ளுங்கள் என்று வங்கதேசத்துக்கு இந்தியா பதிலடி கொடுத்துள்ளது.

மேற்கு வங்கம் மாநிலம் முர்ஷிதாபாத்தில் கடந்த வாரம் ஏற்பட்ட கலவரத்தில் 3 பேர் கொல்லப்பட்டனர், நூற்றுக்கணக்கானோர் காயமடைந்தனர். இது குறித்து வங்கதேச தலைமை ஆலோசகர் முகமது யூனுஸ் இந்திய அதிகாரிகளை அழைத்து, இந்தியாவில் சிறுபான்மை முஸ்லிம்களின் நலன்களை பாதுகாத்துக்கொள்ளுங்கள் என்று தெரிவித்தார்.
இதையும் படிங்க: ‘ஜம்மு காஷ்மீரை விட்டு வெளியேறுங்கள்’: ஐநாவில் பாகிஸ்தானுக்கு இந்தியா கடும் எச்சரிக்கை..!

வங்கதேச ஆலோசகரின் கருத்துக்கு இந்தியா சார்பில் கடும் கண்டனம் தெரிவிக்கப்பட்டது. மத்திய வெளியுறவுத்துறை செய்தித்தொடர்பாளர் ரந்திர் ஜெய்ஸ்வால் கூறுகையில் “வங்கதேசம் தங்கள் நாட்டில் உள்ள சிறுபான்மையினர் நலனில் கவனம் செலுத்த வேண்டும், மாறாக தேவையில்லாத கருத்துக்களைத் தெரிவிக்கக்கூடாது. மேற்கு வங்கம் தொடர்பாக வங்கதேசம் தெரிவித்த கருத்துக்களை இந்தியா மறுக்கிறது. வங்கதேசத்தில் சிறுபான்மையினர் தொடர்ந்து துன்புறுத்தப்படுவது குறித்த இந்தியாவின் கவலை தெரிவித்துள்ளது. இதுபோன்ற செயல்களில் ஈடுபடும் குற்றவாளிகள் தொடர்ந்து சுதந்திரமாக சுற்றித் திரிகிறார்கள். இதை மறைக்கவே இப்படி வங்கதேசம் குற்றம்சாட்டுகிறது.

தேவையற்ற கருத்துக்கள், மாண்பற்ற செயல்களில் ஈடுபடுவதற்கும் பதிலாக, வங்கதேசம் சொந்த நாட்டில் உள்ள சிறுபான்மையினரின் உரிமைகளைப் பாதுகாப்பதில் கவனம் செலுத்தலாம்” எனத் தெரிவித்துள்ளது. வங்கதேசத்தின் முன்னாள் பிரதமர் ஷேக் ஹசினாவின் ஆட்சியில் இருந்து அகற்றப்பின் அந்நாட்டில் வசிக்கும் இந்துக்கள் மீது தொடர் தாக்குதல் நடத்தப்பட்டு வருகிறது.

இதுவரை 200க்கும் மேற்பட்ட இந்து கோயில்கள் தாக்கப்பட்டுள்ளன, சூறையாடப்பட்டன, கோயில் அர்ச்சகர்கள், பூஜாரிகள் தாக்கப்பட்டு கைது செய்யப்பட்டுள்ளனர். இதுதொடர்பாக இந்தியா தொடர்ந்து கவலைகள் தெரிவித்தபோதிலும் வங்கதேசத்தில் உள்ள இந்துக்கள் நிலையில் மாற்றமில்லை. இந்துக் கோயில்கள், மக்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதல் சமீபத்தில் உலகளவில் பெரும்கண்டனை ஏற்படுத்தியது, மனித உரிமை அமைப்புகள், வெளிநாடுகளில் உள்ள இந்திய இந்துக்கள் கண்டனம் தெரிவித்தனர்.
வக்ஃபு திருத்தச் சட்டத்துக்கு எதிராக மேற்குவங்கத்தில் வங்கதேசத்தை எல்லையை ஒட்டி இருக்கும் இரு மாவட்டங்களில்முஸ்லிம்கள் போராட்டத்தில் ஈடுபட்டுவருவதால் பதற்றமாக இருந்து வருகிறது.
இதையும் படிங்க: ராமேஸ்வரம் - மன்னார் இடையே மீண்டும் படகு சேவை..இந்தியாவுடன் பேச்சுவார்த்தை.. இலங்கை அதிபர் அறிவிப்பு!