கடந்த 4 ஆண்டுகளில் இல்லாத அளவாக பொருளாதார வளர்ச்சி குறையும் என்றும் தெரிவித்துள்ளது. கடந்த 2023-24 ஆண்டில் பொருளாதார வளர்ச்சி 8.4 சதவீதம் வளர்ந்திருந்த நிலையில் நடப்பு ஆண்டில் 6.4 சதவீதமாகக் குறையும் என கணிக்கப்பட்டுள்ளது. ரிசர்வ் வங்கி நடப்பு நிதியாண்டில் பொருளாதார வளர்ச்சி 6.6 சதவீதம் வரை உயரலாம் என்று மதிப்பிட்டிருந்தது, அதைவிடக் குறைவாகவே தேசிய புள்ளியியல் அமைப்பு தெரிவித்துள்ளது. மார்ச் 2025ம்ஆண்டோடு நடப்பு நிதியாண்டு முடிகிறது குறிப்பிடத்தக்கது.

2024-25 நிதியாண்டு நாட்டின் பொருளாதார வளர்ச்சி குறித்த முன்கூட்டிய அறிவிப்பு குறித்து தேசிய புள்ளியியல் அலுவலகம்(என்எஸ்ஓ) இன்று வெளியிட்ட அறிக்கையில் “ நாட்டின் உண்மையான ஜிடிபி 2024-25 நிதியாண்டில் 6.4 சதவீதமாக வளரும், இது கடந்த 2023-24 நிதியாண்டுபோடு ஒப்பிடுகையில் குறைவு, கடந்த நிதியாண்டில் 8.2 சதவீதம் வளர்ச்சி இருந்தது.
கொரோனா காலத்தில் நாட்டின் பொருளாதார வளர்ச்சி மைனஸ் 5.8 சதவீதமாகக் குறைந்தநிலையில் அடுத்த ஆண்டில்(2022) 9.7 சதவீதமாகவும், 2023ம்ஆண்டில் 7 சதவீதமாகவும், 2024ம் ஆண்டில் 8.2 சதவீதமாகவும் வளர்ந்தது. ஆனால், நடப்பு நிதியாண்டில் 6.4 சதவீதமாக சரியும் என கணக்கிடப்பட்டுள்ளது.
ஜிடிபி குறித்த முன்கூட்டிய கணிப்பு வெளியீடு என்பது மத்திய அரசு மத்திய பட்ஜெட்டை தயார் செய்வதற்கான முக்கிய அளவுகோலாக இருக்கும் அதேசமயம், நாட்டின் பொருளாதார வளர்ச்சி குறைந்து வருவதையும் சுட்டிக்காட்டுகிறது. குறிப்பாக ஜூலை-செப்டம்பர் காலாண்டில் பொருளாதார வளர்ச்சி குறைந்து 5.4 சதவீதமாகச் சரிந்தது. யாரும் எதிர்பாராத நிலையில் 2வது காலண்டில் பொருளாதார வளர்ச்சி குறைந்ததால் ரிசர்வ் வங்கியும் பொருளாதார வளர்ச்சி குறித்த தனது கண்ணோட்டத்தை மாற்றி, குறைத்து மதிப்பிட்டு வெளியிட்டது. தொடக்கத்தில் நாட்டின் பொருளாதார வளர்ச்சி நடப்பு ஆண்டில் 7.2 சதவீதமாக இருக்கும் என மதிப்பிட்ட நிலையில் 6.6 சதவீதமாக ரிசர்வ் வங்கி குறைத்தது.
இதையும் படிங்க: இந்தியாவில் வாக்காளர்கள் எண்ணிக்கை எவ்வளவு தெரியுமா?.. அடேயப்பா, கேட்டா அசந்து போய்டுவீங்க

உற்பத்தி துறையில் ஏற்பட்ட சுணக்கம், மக்களின் வாங்கும் திறன் குறைந்தது, மக்கள் செலவிடுவது குறைந்தது ஆகியவை பொருளாதார வளர்ச்சி குறைவுக்கான காரணங்களாக பொருளாதார வல்லுநர்கள் தெரிவிக்கிறார்கள்.
பொருளாதார வளர்ச்சி குறையும் என மதிப்பிட்டிருப்தால், நிதி நிலைத்தன்மையை பட்ஜெட்டில் கொண்டுவருவது ஆட்சியாளர்களுக்கும், நிதித்துறைக்கும் கடும் சவாலாக அமையும் என்று கூறப்படுகிறது.
அதேசமயம், வேளாண் வளர்ச்சி, கட்டுமானத்துறை, நிதி, ரியல் எஸ்டேட், முறைப்படுத்தப்பட்ட சேவைத்துறையில் வளர்ச்சி எதிர்பார்த்த வளர்ச்சியைப் பெறும் என்றும் தேசிய புள்ளியியல் அலுவலகம் தெரிவித்துள்ளது.
இதையும் படிங்க: ‘இன்டர்போலு’க்கே இனி ‘டஃப்’ கொடுப்போம்: அமித் ஷா அறிமுகம் செய்த ‘பாரத்போல்’ தளம் பற்றி தெரியுமா..