புதிய தோற்றத்துடன் பிளாஸ்டிக்கில் வடிவமைப்பு, பல்வேறு சுவை, பிராண்ட் ஆகியவை வெளிநாட்டில் வாடிக்கையாளர்களை எளிதாக ஈர்த்துள்ளது இந்திய கோலிசோடா.
மத்திய வர்தத்கத்துறையின் கீழ் வரும் வேளாண் மற்றும் பதப்படுத்தப்பட்ட உணவுகள் ஏற்றுமதி மேம்பாட்டு ஆணையம் (ஏபிஇடிஏ) வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது:

இந்தியாவின் பாரம்பரிய குளிர்பானமான கோலிசோடா உள்ளிட்ட பல்வேறு சுவைகளில் வரும் குளிர்பானங்களுக்கு வெளிநாடுகளில் வாடிக்கையாளர்களிடம் மிகச்சிறந்த வரவேற்பு கிடைக்கிறது. குறிப்பாக பிரிட்டன், ஐரோப்பிய நாடுகள், வளைகுடா நாடுகள், அமெரிக்காவில் நல்ல வரவேற்பு மக்களிடம் இருக்கிறது.
இதையும் படிங்க: இந்திய மாணவரை அமெரிக்காவிலிருந்து அனுப்பத் தடை.. ட்ரம்ப் அரசுக்கு நீதிமன்றம் உத்தரவு..!
கோலிசோடாவின் நவீன வடிவம், புதிய சுவை, புத்தாக்கம் மக்களைக் கவர்ந்துள்ளது.கோலிசோடா என்ற பெயரை கோலிபாப் சோடா என்று மாற்றியுள்ளது. வளைகுடாவில் லூலு சூப்பர்மார்க்கெட்டில் கோலிபாப் சோடாவுக்குநல்ல கிராக்கி இருக்கிறது.

ஒரு காலத்தில் கிராமங்களில், நகரங்கலில், வீடுகளில் விருந்தினருக்கம், விருந்து, பண்டிகைகளிலும் பிரதான உணவாக இருந்த கோலிசோடா குளிர்பானம், அதன் புதுமையான கண்டுபிடிப்பு மற்றும் வியாபார விரிவாக்கத்தால், உலக அரங்கில் பிரபலமடைந்து வருகிறது. ஏற்கெனவே சந்தையில் கோலிசோடாவுக்கு நல்ல வரவேற்பு இருக்கும் நிலையில், அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகள்,பிரிட்டனுக்கும் ஏற்றுமதி செய்யப்படுகிறது.
பன்னாட்டு நிறுவனங்கள் இந்தியச் சந்தையில் வந்ததால், இந்த பாரம்பரிய குளிர்பானம் ஏறக்குறைய சந்தையில் இருந்து காலியானது. உலக சந்தைகளில் உள்நாட்டு உணவு மற்றும் குளிர்பானப் பொருட்களை ஊக்குவிப்பதற்கும் ஏற்றுமதி செய்வதற்கும் இந்தியாவின் முயற்சிகளில் ஒரு குறிப்பிடத்தக்க மைல்கல்லை எட்டுகிறது.

கோலிபாப் சோடா அதன்வடிவம், தன்மை, சுவையைக் கடந்து மக்கள் நினைவில் நிற்கும் சிறந்த பாரம்பரியபானம். சர்வதேசந்தையில் ரிபிராண்டி செய்யும்போது, சந்தையில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும். வெளிநாடுகளில் இந்த கோலிசோடாவுக்கு இருக்கும் தேவை என்பது உள்நாட்டு பானங்கள் சர்வதேச பிராண்டுகளின் சுவைக்கு போட்டிளிக்க முடியும் என்பதை காட்டுகிறது” எனத் தெரிவித்துள்ளது.
இதையும் படிங்க: பெற்றோரின் சண்டையால் நேர்ந்த கொடூரம்..! மகனின் கழுத்தை அறுத்துக் கொன்ற இந்தியப் பெண்..!