கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் ரயில் நிலையத்தில் தண்டவாளத்தில் தனது நண்பருடன் உடற்பயிற்சி மேற்கொண்ட கண்ணன் என்பவரின் வீடியோ சமூக வலைதளங்களில் பரவியதை தொடர்ந்து நாகர்கோவில் ரயில்வே பாதுகாப்பு படையினர் வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர்.
கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் அருகே தாமரை குட்டி விளை பகுதியை சேர்ந்தவர் கண்ணன். இவர் கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக அதிகமான எடை கொண்ட பெருட்களை தூக்கி சாதனைகள் படைத்து வருகிறார். இளம் வயதில் இருந்து உடற்பயிற்சி செய்து பல பரிசுகளையும் பெற்று உள்ளார். மேலும் லாரியை கயிற்றால் கட்டி இழுத்தும் இரு சக்கர வாகனங்களை தூக்கியும் கனரக வாகனங்களை தனது உடலால் இழுத்து மூன்று முறை ஸ்ட்ராங் மேன் ஆஃப் இந்தியா பட்டம் வென்று உள்ளார். பல்வேறு எடை பிரிவு போட்டிகளில் பங்கேற்று சாதனைகள் பல படைத்து வருகிறார்.

இவர் தமது செயல்களை வீடியோவாகப் பதிவு செய்து சமூக வலைத்தளங்களில் பதிவேற்றம் செய்து வருகிறார். இன்னும் பல்வேறு செயல்களை செய்து உள்ளார். இவரது வீடியோ பதிவுகளை ஆயிரகணக்கான இளைஞர்கள் பின் தொடர்கின்றனர். எனவே இவரது வீடியோக்கள் அடிக்கடி வைரல் ஆகி வருகின்றன. அண்மையில் தமது சமூக வலைதள பக்கத்தில் வீடியோ ஒன்றை பகிர்ந்து உள்ளார்.
இதையும் படிங்க: அந்த காலத்து 'டோல்கேட்'... மதுரையில் கிடைத்த முதல் கல்வெட்டு..!
நாகர்கோவில் சந்திப்பு ரயில் நிலையத்தில் நாகர்கோவில் சந்திப்பு என்ற பெயர் பலகையின் அருகில் உள்ள நடைபாதையை ஒட்டிய தண்டவாளம் அருகே நண்பர் ஒருவருடன் உடற்பயிற்சி செய்து அதை வீடியோவாகப் பதிவு செய்து, சமூக வலை தளத்தில் பதிவு செய்து உள்ளார்.

இந்த வீயோவை நெட்டிசன்கள் பகிர்ந்து வருவதுடன் ரயில் தண்டவாளத்தில் ஆபத்தை உணராமல் இது போல செய்வது நல்லதல்ல என விமர்சித்து உள்ளனர். பொதுவாக ரயில் நிலையத்தில், எதிர் புறம் உள்ள நடை மேடைக்கு செல்ல, தண்டவாளத்தில் குதித்து குறுக்கே நடந்தால் ரயில்வே போலீசார் அவர்களைப் பிடித்து அபராதம் விதிப்பது வழக்கம்.

ஆனால், இவர் தண்டவாளத்தில் உடற்பயிற்சி செய்து வீடியோ வெளியிட்டும் கூட அவர் மீது இன்னும் நடவடிக்கை எடுக்காத து ஏன் என்று பலர் விமர்சித்துள்ளனர். இந்நிலையில் இந்த வீடியோ குறித்து விசாரணை மேற்கொண்ட ரயில்வே பாதுகாப்பு படை போலீசார், கண்ணன் மீது வழக்கு பதிவு செய்து அவரை கைது செய்தனர். பின்னர் அவர் ஜாமீனில் விடுதலை செய்யப்பட்டார்.
இதையும் படிங்க: பாமகவுக்குள் வெடித்த பூகம்பம்; பொங்கியெழுந்தவர்களை பொசுக்கென அமைதிப்படுத்திய அன்புமணி..!