வர உள்ள 2026 சட்டமன்ற தேர்தலை எதிர்கொள்ள கட்சிகள் இப்போதே தயாராகி வருகின்றன. அதற்கு தொடக்கமாக டெல்லியில் அமித் ஷா - எடப்பாடி பழனிசாமி இடையிலான சந்திப்பு அமைந்துள்ளது. கூட்டணி பேச்சுவார்த்தைக்காக போகவில்லை என அடித்துக்கூறிய எடப்பாடி பழனிசாமி, நைசாக போய் அமித் ஷாவை சந்தித்தோடு சில டீல்களையும் பேசி முடித்திருப்பதாகக் கூறப்படுகிறது.

அதிமுக - பாஜக கூட்டணி பிளவுக்கு முக்கிய காரணமாக இருந்தவரே அண்ணாமலை தான், அவர் அதிமுக தலைவர்களை கடுமையாக விமர்சிக்கப்போய் தான் தேசிய ஜனநாயக கூட்டணியில் இருந்து அதிமுக வெளியேறியது. அதன் பின்னர் பாஜகவுடன் எப்போதும் கூட்டணி கிடையாது என்ற அறிவிப்போடு, மக்களவை தேர்தலைக் களம் கண்ட அதிமுக படுதோல்வி அடைந்தது. பாஜகவின் நிலைமையோ இன்னும் மோசம்.
இதையும் படிங்க: சி.வி.சண்முகத்திற்கு வாய்பூட்டு சட்டம் போட்ட நீதிமன்றம்.. கட்டுப்பாடுடன் பேசவேண்டும் என்று அறிவுரை..!

அப்போதிலிருந்தே அதிமுகவை மீண்டும் தங்கள் பக்கம் வளைக்க பாஜக படாதபாடு பட்டு வந்தது. அதிமுக முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி இல்ல திருமணத்தின் திரை மறைவில் நடந்த சில அரசியல் பேச்சுவார்த்தைகளே, அமித் ஷா - எடப்பாடி இடையிலான திடீர் சந்திப்புக்கு காரணம் எனக்கூறப்படுகிறது. அப்போதும் அண்ணாமலையை எடப்பாடி பழனிசாமி தவிர்த்தே வந்தார். அமித் ஷாவுடனான சந்திப்பின் போது முதலமைச்சர் வேட்பாளர் எடப்பாடி பழனிசாமி தான் என்ற டீலுக்கு அமித் ஷா ஓகே சொன்னதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதை நாங்கள் ஒத்துக்கொள்வது போல், அண்ணாமலை விவகாரத்தையும் நீங்கள் கண்டுகொள்ளக்கூடாது என அமித் ஷா பதில் கண்டிஷன் போட்டுள்ளாராம்.

அதேபோல் இணை அமைச்சர் பதவி தருவதாகவும் அதிமுகவிற்கு வாக்கு கொடுக்கப்பட்டுள்ளதாக தெரிகிறது. ஒருவேளை மத்திய அரசின் இணை அமைச்சர் பதவி கிடைத்தால், அந்த வாய்ப்பு சிவி சண்முகத்திற்கு தான் செல்லும் எனக்கூறப்படுகிறது. டெல்லி அதிமுக என்றாலே தம்பிதுரை தானே, சீனியர் அவர் தான் அவருக்குத் தான் பதவி கிடைக்கும் என்று பார்த்தால். தம்பிதுரையின் மாநிலங்களவை எம்.பி பதவிக்காலம் விரைவில் முடிவடைய உள்ளதாம். இதனால் அவருக்கு அடுத்த இடத்தில் உள்ள சிவி சண்முகத்திற்கு இந்த ஜாக்பாட் அடிக்கக்கூடும் என பேச்சு கிளம்பியுள்ளது.
இதையும் படிங்க: டெல்லிக்கு அண்ணாமலை பயணம்.. அமித் ஷாவுடன் சந்திப்பு.. அதிமுக - பாஜக கூட்டணி தொடர்பாக அதிரடி மூவ்!!