இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனமான இஸ்ரோவுக்கு சதீஷ் தவான் விண்வெளி ஆய்வு மையத்தில் மட்டுமே ராக்கெட் ஏவுதளம் உள்ளது. அங்குதான் இந்தியாவின் செயற்கைக்கோள்கள் மற்றும் பல்வேறு உலக நாடுகளின் செயற்கைக்கோள் ஏவப்பட்டுள்ளன. அங்கு தான் பி.எஸ்.எல்.வி, ஜி.எஸ்.எல்.வி, போன்ற ராக்கெட்டுகளின் உதவியோடு பல செயற்கைக்கோள்கள் விண்ணில் ஏவப்பட்டுள்ளன.

தற்போது நாட்டின் இரண்டாவது ஏவுதளத்தை அமைக்கும் பணியில் இஸ்ரோ ஈடுபட்டிருக்கிறது. அதற்காக அவர்கள் தேர்வு செய்த இடம் தான் தமிழகத்தின் தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள குலசேகரப்பட்டினம்.
இதையும் படிங்க: மத்திய அரசால் வேதனை.. பிரதமருக்கு கடிதம் அனுப்பிய முதலமைச்சர் ஸ்டாலின்!!
இரண்டு ஆண்டுகளுக்குள் அங்கு ராக்கெட் ஏவுதளம் அமைக்கும் பணி முழுமையாக நிறைவடையும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த ஏவுதளத்திற்கு அருகில்தான் விண்வெளி தொழில் பூங்காவைத் தொடங்கவும் தமிழக அரசு திட்டமிட்டுள்ளது.

பொதுவாக ஒரு ராக்கெட் ஏவுதளம் பூமத்திய ரேகைக்கு அருகில் அமைந்திருக்க வேண்டும். ஏவுதளத்தில் இருந்து ஏவப்படும் விண்கலங்கள் தென்துருவத்தை நோக்கி, கிழக்கு கடற்கரைக்கு அருகில் இருக்கும் ஒரு பகுதியிலிருந்து ஏவப்பட வேண்டும். அப்போதுதான் பூமியின் சுழல் வேகம் கூடுதலாக கிடைக்கும் என்று சொல்லப்படுகிறது.

இவ்வாறு ஏவப்படும்போது ஒரு ராக்கெட்டின் முழு ஆற்றலும் பயன்படுத்தப்படும் என்பதால் அதிக எடை கொண்ட செயற்கைக்கோள்களைக் கூட எளிதாக ஏவ முடியும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது இதன் காரணமாகவே குலசேகரன் பட்டினம் தீர்வு செய்யப்பட்டுள்ளது.
இந்த நிலையில் குலசேகரன் பட்டினத்தில் அமைய உள்ள ராக்கெட் ஏவுதளம் அமைப்பதற்கான பணிகளை பூமி பூஜையுடன் இஸ்ரோ தொடங்கியுள்ளது.

இந்த ராக்கெட் ஏவுதளம் அமைக்க கடந்த ஆண்டு பிரதமர் மோடி அடிக்கல் நாட்டி வைத்தார். அன்றைய தினமே ரோகினி 6H 200 என்ற சிறிய ரக ராக்கெட்டை இஸ்ரோ வெற்றிகரமாக விண்ணில் செலுத்தியது.குலசேகரன் பட்டினத்தில் ராக்கெட் ஏவுதளம் அமைக்க 2233 ஏக்கர் நிலங்கள் கையகப்படுத்தும் பணிகள் தொடங்கியுள்ளன.
இதையும் படிங்க: கொரோனாவால் அதிக வட்டி... ரிசர்வ் வங்கிக்கு ஆர்டர் போட்ட சென்னை கோர்ட்!!