உண்ணாவிரத போராட்டத்தில் பல்வேறு துறைகளை சேர்ந்த 700 க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கங்களை எழுப்பினர். ஜாக்டோ ஜியோ சார்பில் பத்து அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி மாவட்டத் தலைநகரங்களில் உண்ணாவிரதப் போராட்டம் நடத்துவதாக அறிவிக்கப்பட்டிருந்தது.
அதன்படி திருநெல்வேலி பாளையங்கோட்டையில் நடைபெற்ற உண்ணாவிரத போராட்டத்தில் ஆசிரியர்கள், அரசு ஊழியர்கள், களப்பணியாளர்கள், தலைமைச் செயலக ஊழியர்கள், தொழில்நுட்ப ஊழியர்கள், ஊர்தி ஓட்டுநர்கள் உள்ளிட்ட பல்வேறு துறைகளைச் சேர்ந்தவர்கள் கலந்து கொண்டனர்.

முதல்வரின் தேர்தல் கால வாக்குறுதியான பழைய ஓய்வூதிய திட்டத்தை மீட்டெடுத்தல், அரசின் பல்வேறு துறைகளில் 30 விழுக்காட்டிற்கு மேலாக உள்ள காலி பணியிடங்களை நிரப்புதல், சரண்டர் விடுப்பு ஒப்படைப்பு அறிவிப்பு தேதியை 1-4-2026 என்பதை 1-4-2025 என மாற்றம் செய்திட வேண்டும்.
இதையும் படிங்க: தமிழக அரசை கண்டித்து ஊர்வலமாக சென்ற பாஜகவினர் கைது..!
உயர் கல்விக்கான ஊக்க ஊதிய உயர்வு ஆகியவற்றை உடனடியாக வழங்க வேண்டும், உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் பணிபுரியும் இடைநிலை ஆசிரியர்களை பட்டதாரி ஆசிரியர்களாக உயர்த்த வேண்டும் உள்ளிட்ட பத்து அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி ஜாக்டோ ஜியோ அமைப்பினர் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர். பாளையங்கோட்டை சித்த மருத்துவ கல்லூரி அருகே நடைபெற்ற உண்ணாவிரத போராட்டத்தில் 100 பெண்கள் உட்பட சுமார் 700க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கங்களை முழங்கினர்.
இதையும் படிங்க: கனிமவளம் ஏற்றிக்கொண்டு அதிவேகமாகச் சென்ற லாரி.. இரண்டாவது நாளாக பொதுமக்கள் போராட்டம்..