திருச்செந்தூர் முருகன் கோவிலில் விசேஷமாக கொண்டாடப்படும் திருவிழாக்களில் மாசி திருவிழாவும் ஒன்று. அந்த திருவிழாவில் சுவாமி ஒவ்வொரு நாளும் பல்வேறு அலங்காரத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சியளிப்பது வழக்கம்.
அந்த வகையில் இந்த ஆண்டுக்கான மாசி திருவிழா கடந்த மார்ச் மூன்றாம் தேதி அதிகாலையில் கொடியேற்றத்துடன் தொடங்கியது. திருவிழா நாட்களில் நாள்தோறும் சுவாமி அம்மன் காலை, மாலை இரண்டு வேலைகளிலும் சப்பரம் அல்லது தேர்தலில் எழுந்தருளி வீதி உலா செல்வர்.

இன்று ஏழாம் நாளை முன்னிட்டு கோயிலில் அதிகாலை முதலே நடை திறக்கப்பட்டு சுவாமிக்கு அர்ச்சனைகள் மற்றும் ஆராதனைகள் காட்டப்பட்டது. அதிகாலை 5 மணி அளவில் அருள்மிகு சண்முகப் பெருமானின் உருகு சட்ட சேவை நிகழ்ச்சி நடைபெற்றது.
இதையும் படிங்க: மாரியம்மன் கோயிலில் களைகட்டிய குடமுழக்கு விழா.. ஏராளமான பக்தர்கள் சாமி தரிசனம்
அதிகாலை முதலே ஏராளமான பக்தர்கள் கோவிலில் குவிந்து சுவாமி தரிசனம் செய்தனர். அதிகாலை பூஜையை தொடர்ந்து ஒன்பது மணிக்கு ஆறுமுகப்பெருமான் வெட்டிவேர் சப்பரத்தில் எழுந்தருளி கான குவிந்து இருந்த பக்தர் பெருமக்களுக்கு காட்சியளித்தார்.

தொடர்ந்து அங்கிருந்து பிள்ளையான் கட்டளை மண்டபத்தை சென்றடைந்த சுவாமிக்கு வழி நெடுகிலும் பூஜைகள் மற்றும் அபிஷேகங்கள் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.
இதையும் படிங்க: லேடி கெட்டப் போட்டு இரவில் விசிக நிர்வாகி சில்மிஷம்..! இயக்குநரின் மனைவிக்கு டார்க்கெட்..!