சென்னை தாம்பரம் அடுத்த மாடம்பாக்கம் பாலாஜி நகர் பிரதான சாலையில் தனி நபருக்கு சொந்தமான இடம் ஒன்று இருந்துள்ளது. அந்த இடத்தின் அருகில் குப்பைகள் கொட்டப்பட்டு இருந்தன. அப்போது அங்கு குழந்தை ஆளும் சத்தம் கேட்டுள்ளது. இதனால் சந்தேகம் அடைந்த அக்கம் பக்கத்தினர் குழந்தை சத்தம் எங்கிருந்து வருகிறது என தேடுதலில் இறங்கியுள்ளனர். அப்போது, குப்பைகளுக்கு இடையே தொப்புள்கொடியுடன் பெண் சிசு ஒன்று அழுது கொண்டே இருப்பதை அப்பகுதியை சேர்ந்தவர்கள் கண்டுள்ளனர். இதனை அடுத்து அதிர்ச்சி அடைந்த பகுதி மக்கள் உடனடியாக சிசுவை மீட்டதுடன் சேலையூர் காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்துள்ளனர்.

தகவல் அறிந்தது சம்பவ இடத்திற்கு வரைந்த போலீசார் சிசுவை அருகில் இருந்த மருத்துவமனைக்கு கொண்டு சென்று முதலுதவி சிகிச்சை அளித்தனர். அதைத்தொடர்ந்து சிசுவை குப்பைகளுக்கு இடையே வீசியது யார் என்பது குறித்த விசாரணையை தீவிர படுத்தினர். அதன் ஒரு பகுதியாக பகுதியில் உள்ள சிசிடிவி காட்சிகளை போலீசார் கைப்பற்றி ஆய்வு செய்தனர். அதில் 20 வயது மதிக்கத்தக்க பெண் ஒருவர் சிசுவை வீசிவிட்டு சென்றது பதிவாகி இருந்தது. இதுகுறித்து போலீசார் விசாரணையை தீவிர படுத்திய போது, அந்தப் பெண் கல்லூரி படிக்கும் மாணவி என தெரிய வந்தது.
இதையும் படிங்க: ஆட்டோவில் தவறிய I-Pad.. பத்திரமாக மீட்பு.. ஆட்டோ ஓட்டுநற்கு குவியும் பாராட்டுகள்..

மேலும் மாணவிக்கு அவரது தாயார் வீட்டிலேயே பிரசவம் பார்த்தது தெரிய வந்தது. தொடர்ந்து மாணவி மற்றும் அவரது தாயாரை போலீசார் விசாரணை செய்ததுடன், பலவீனமற்று காணப்பட்ட மாணவி மற்றும் குழந்தையை சிகிச்சைக்காக தனியார் மருத்துவமனையில் அனுமதித்தனர். தற்போது குழந்தை மற்றும் தாய் ஆகிய இருவரும் குழந்தைகள் நல மருத்துவமனையில் கண்காணிப்பில் உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. முன்னதாக மாணவி குழந்தையை குப்பையில் வீசியதற்கான காரணமும் வீட்டிலேயே பிரசவம் பார்த்ததற்கான விளக்கம் குறித்து போலீசார் அவரது தாயாரிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இதையும் படிங்க: அலெர்ட் ஆகிக்கோங்க மக்களே.. தமிழகத்தில் கனமழைக்கு வாய்ப்பு.. எந்தெந்த மாவட்டங்கள் தெரியுமா?