நாம் தமிழர் கட்சியின் மகளிர் பாசறை மாநில ஒருங்கிணைப்பாளராக உள்ள காளியம்மாள் பிரகாசம் கட்சியிலிருந்து விலக உள்ளதாகவும் அவர் திமுகவில் இணைய உள்ளதாகவும் கூறப்படுகிறது.
தூத்துக்குடி, மணப்பாட்டில் மார்ச்- 3ம் தேதி திமுக -காங்கிரஸ் நிர்வாகிகள் பங்கேற்கும் நிகழ்ச்சி அழைப்பிதழில் நாதகவின் காளியம்மாளின் பெயர் சமூக செயற்பாட்டாளர் என இடம்பெற்று உள்ளதால் சந்தேகம் ஏற்பட்டுள்ளது.

நாம் தமிழர் கட்சியின் பெண்கள் பாசறை மாநில ஒருங்கிணைப்பாளராக காளியம்மாள் உள்ளார். நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமானுடன் அவருக்கு கருத்து வேறுபாடு ஏற்பட்டுள்ள நிலையில், கடந்த சில நாட்களாக கட்சி நிகழ்ச்சிகளில் பங்கேற்காமல் இருந்து வருகிறார்நாம் தமிழர் கட்சியில் இருந்து விலக உள்ளது குறித்து விரைவில் அறிவிக்க உள்ளதாக காளியம்மாள் தெரிவித்து உள்ளார்.
இதையும் படிங்க: தவெகவுக்கு ஷாக்… விஜய் கட்சிக்கு வருகிறாரா..? 'பிசிறு' தட்டாமல் உண்மையை விளக்கிய காளியம்மாள்..!
தூத்துக்குடி மாவட்டம், மணப்பாடு கிராமத்தில் முன்னாள் ஊராட்சி மன்றத் தலைவர் விஜோஜ் என்பவரின் குழந்தையின் முதல் திருவிருந்து விழா அழைப்பிதழ் வெளியாகி உள்ளது. இந்த நிகழ்ச்சியில் திமுக அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன், திமுக செய்தித் தொடர்பாக கான்ஸ்ன்டைன் ரவீந்திரன், காங்கிரஸ் எம்.எல்.ஏ தாரகை கத்பட் ஆகியோரது பெயர்களுடன் காளியம்மாள் பெயரும் இடம்பெற்று உள்ளது.

நாம் தமிழர் கட்சியின் பெண்கள் பாசறை மாநில ஒருங்கிணைப்பாளராக காளியம்மாளுடன், தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமானுக்கு கருத்து வேறுபாடு ஏற்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. இந்நிலையில், கடந்த சில நாட்களாக கட்சி நிகழ்ச்சிகளில் பங்கேற்காமல் இருந்து வந்தார் காளியம்மாள். ஈரோடு கிழக்கு தொகுதியில் நடைபெற்ற இடைத்தேர்தல் பிரச்சாரத்திலும் காளியம்மாள் கலந்து கொள்ளவில்லை.
விஜய் தொடங்கி உள்ள தமிழக வெற்றிக் கழகத்தில் காளியம்மாள் இணையப்போவதாக வெளியான தகவல்களுக்கு மறுப்பு தெரிவித்து இருந்தார். இந்த நிலையில் அவர் விரைவில் திமுகவில் இணைய வாய்ப்புகள் உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
கடந்த 2019ஆம் ஆண்டு நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலில் வட சென்னை தொகுதியில் போட்டியிட்டதன் மூலம் பிரபலம் ஆனவர் காளியம்மாள். அதன் பின்னர் நாம் தமிழர் கட்சி பிரதிநிதியாக ஊடக விவாதங்களில் கலந்து கொண்டு பொதுமக்களின் கவனிப்பை பெற்று இருந்தார். இந்த நிலையில் காளியம்மாளை ‘பிசிறு’ என்று விமர்சித்து பேசிய நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமானின் ஆடியோ சமூகவலைத்தளங்களில் வைரலாகி சர்ச்சையை ஏற்படுத்தியது. காளியம்மாள் நாம் தமிழர் கட்சியில் இருந்து விலகி விரைவில் வேறு கட்சியில் இணைவார் என பேசப்பட்டது. ஆனால் சீமான் கலந்து கொண்ட நிகழ்ச்சியில் காளியம்மாளும் பங்கேற்று ஊகங்களுக்கு முற்றுப்புள்ளி வைத்தார்.

இந்நிலையில், எனது முடிவு குறித்து அனைத்திற்கும் இன்று பதில் அளிக்கிறேன் என காளியம்மாள் விளக்கம் அளித்துள்ளார். இந்நிலையில், ''சீமானை விட மோசமானவர் காளியம்மாள். பதவிக்கு வருவதற்கு முன்பாகவே பணத்தை கோடிக்கணக்கில் குவிக்கும் பண வெறிபிடித்தவர். காளியம்மாவை தங்கள் கட்சியில் சேர்த்துக் கொள்கின்ற பெரும் தவறினை திமுக, அதிமுக, தவெக செய்துவிடக் கூடாது. சீமான் நாகப்பாம்பு என்றால் காளியம்மாள் கருநாகபாம்பு ஆவார்'' என எச்சரிக்கை விடுத்து வருகிறார்கள் நாதக தம்பிகள்.
இது ஒருபுறமிருக்க, கயல்விழிக்கு ரூட்டு கிளியர்… காளியம்மாள் விலகினால் மாநில மகளிர் பாசறை ஒருங்கிணைப்பாளர் இடத்திற்கு கயல்விழி வருவதாகவும் தகவல்கள் கூறுகின்றன.
இதையும் படிங்க: பெரிய கட்சிகள் கூப்பிட்டே போகாதவன்.. விஜய்யிடம் கூட்டணி வைப்பேனா.? தவெக கூட்டணிக்கு நோ சொன்ன சீமான்