த்ரிஷா, விஜய், கீர்த்தி சுரேஷ் ஆகிய பெயர்களின் முதல் எழுத்தைக் கொண்டே விஜய் தனது கட்சிக்கு பெயர் வைத்திருப்பதாக திராவிட தெலுங்கர் முன்னேற்ற கழக நிறுவனர் காமாட்சி நாயுடு பேசியிருப்பது சர்ச்சையைக் கிளப்பியுள்ளது.
சினிமாவுக்கு முழு நேர முழுக்கு போட்டுவிட்டு, விஜய் தமிழக வெற்றிக் கழகத்தை ஆரம்பித்தார். கட்சியை ஆரம்பித்த கையோடு சுற்றுப்பயணம், போராட்டம் என சினிமாவைப் போலவே நிஜத்திலும் தூள் கிளப்புவார் என பார்த்தால், வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களை நேரில் போய் சந்தித்து ஆறுதல் கூறாமல், பனையூர் அலுவலகத்திற்கு வரவழைத்து நிவாரணம் வழங்கியது, அனைத்து சமூக பிரச்சனைகளுக்கும் கண்டன அறிக்கை மட்டுமே வெளியிட்டு விட்டு, செய்தியாளர்களைச் சந்திப்பதை தவிர்த்தது போன்ற செயல்களில் ஈடுபட்டது தமிழக வெற்றிக் கழகம் என்ற பெயரை பனையூர் வெற்றிக் கழகம் என மாற்றிவிடலாம் என விமர்சிக்கும் அளவிற்கு மோசமானது.

நடிகராக இருக்கும் போது பொது இடத்திற்கு வருவதை தவிர்ப்பது அவர்கள் மீதான ரசிகர்களின் ஈர்ப்பை அதிகரிக்கும், ஆனால் அரசியல்வாதி மக்களோடு, மக்களாக கலக்க, கலக்கத்தான் அவர்களுடைய மதிப்பு கூடும் இது கூடவா விஜய்க்கு தெரியவில்லை என விமர்சனங்கள் எழுந்தன. மக்கள் பிரச்சனைக்காக களத்தில் இறங்காதவர், கோவாவில் நடந்த கீர்த்தி சுரேஷ் கல்யாணத்தில் பங்கேற்பதற்காக குடும்பத்தை எல்லாம் விட்டு விட்டு, த்ரிஷாவுடன் தனி விமானத்தில் கிளப்பிச் சென்றார். இது சர்ச்சையின் உச்சத்தையே தொட்டது. மக்களை சந்திக்க நேரமில்லை, ஆனால் நடிகையின் திருமணத்திற்கு தனி விமானத்தில் செல்ல நேரம் இருக்கிறதா உங்கள் தலைவருக்கு... என தவெகவினரை சோசியல் மீடியாவில் பிற கட்சியினர் வம்பிழுத்தனர்.
இதையும் படிங்க: சீமான் இப்படி பேச காரணமே விஜய் தான் ...! கொளுத்தி போட்ட புகழேந்தி...!

மற்றொருபுறம் கட்சி ஆரம்பித்தது விஜய்யாக இருந்தாலும், த்ரிஷா அதில் முக்கிய பங்கு வகிப்பதாகவும் விரைவில் அவருக்கு முக்கிய பதவி கொடுக்கப்படவுள்ளதாகவும் பேச்சுகள் கிளம்பின. அதை நிரூபிப்பது போல் விஜய் கட்சியை ஆரம்பிப்பதற்கு முன்னதாகவே அவருடைய கட்சி கொடி கலரில் புடவை அணிந்து வந்து “என்ன நடை... என்ன நடை...” கோட் படத்தில் த்ரிஷா குத்தாட்டம் போட்டது சோசியல் மீடியாவில் ட்ரோல் செய்யப்பட்டது.

ஏற்கனவே விஜய்க்கு விவகாரத்து ஆகிவிட்டதாகவும், அதற்கு காரணம் த்ரிஷா, கீர்த்தி சுரேஷ் உடன் அவருக்கு இருக்கும் பழக்கம் தான் என்றெல்லாம் செய்திகள் வெளியாகின. இப்படி த்ரிஷா, கீர்த்தி சுரேஷை வைத்து ஏராளமான கிசுகிசுக்கள் கிளம்பி வரும் நிலையில், கட்சியையே விஜய் அவர்கள் பெயரை வைத்து தான் ஆரம்பித்துள்ளார் என பகீர் கிளப்பியுள்ளார் காமாட்சி நாயுடு.

யூடியூப் சேனல் ஒன்றிற்கு பேட்டியளித்துள்ள திராவிட தெலுங்கர் முன்னேற்ற கழக நிறுவனர் காமாட்சி நாயுடு, “த்ரிஷா, அவர் பெயர் விஜய், கோவாவுல ஒரு நடிகை கல்யாணத்துக்குப் போனாரே அவங்க பேரு என்ன கீர்த்தி சுரேஷ்... இந்த பெயரோட முதல் எழுத்தை எடுத்து வச்சி பாருங்க TVK. விஜய் கட்சி பெயர் வரும்” என பேசியிருப்பது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.
View this post on Instagram
A post shared by MADRASMEMES (@madrasmemes.ig)
இதையும் படிங்க: விஜய் ரூட்டைப் பிடித்து... இளைஞர்கள் ஹார்ட்டை பிடிக்கும் மு.க.ஸ்டாலின்... முதல்வரின் தரமான சம்பவம்!