வடக்கில் காசி என்றால் தெற்கில் தென்காசி என்ற பெருமைக்கிணங்க நிகரான சிறப்புகளை கொண்டுள்ளது காசி விஸ்வநாதர் ஆலயம். நகரின் மையப்பகுதியில் அமைந்துள்ள பிரசத்தி பெற்ற பழமை வாய்ந்த இத்திருதளத்தில் 19 ஆண்டுகளுக்குப் பிறகு இன்று மகா குடமுழக்கு விழா வெகு விமரிசையாக நடைபெற்றது.

முன்னதாக இத்திருதலத்தின் மூலவர் காசிவிசுவநாதர், தாயார் உலகம்மை ஆவர். இத்தலத்தில் மாசி மகம், ஐப்பசி உத்திரம் ஆகிய நாட்களில் விழாக்கோலம் பூண்டிருக்கும். இந்த நிலையில், குடமுழுக்கு விழா நடைபெற்று 19 ஆண்டுகளில் கடந்த நிலையில், தற்போது குடமுழுக்கு விழா நடத்துவதற்கு கோயில் நிர்வாகம் திட்டமிட்டது.
இதையும் படிங்க: முதல்வன் பட பாணியில் கொள்ளை.. வசமாக சிக்கிய ரேஷன் ஊழியர்.. சுத்துப்போட்ட மக்கள்..!

அதன்படி குடமுழக்கு விழாவிற்கு என்று கோயில் திருப்பணிகள் கடந்த சில மாதங்களாகவே நடைபெற்று வந்தது. தொடர்ந்து இன்று நடைபெற்ற குடமுழக்கு விழாவானது யாகசாலை பூஜைகளுடன் தொடங்கி பல்வேறு அபிஷேகங்கள் மற்றும் தீபாரதனைகளுடன் நிறைவுபெற்றது.

அதனைத் தொடர்ந்து அதிகாலை 3 மணி அளவில் விக்னேஸ்வர பூஜை ஆறாம் கால யாகசாலை பூஜை ஆகியவற்றுடன் தொடங்கிய நிலையில், அதிகாலை 5 மணிக்கு விநாயகர் மற்றும் பரிவாரமூர்த்திகளுக்கு மகா குடமுழக்கு விழா கோலாகளமாக நடைபெற்றது.

அதனைத் தொடர்ந்து காலை 9 மணி அளவில் உலகம்மாள் உடனுறை காசி விஸ்வநாதர் சுவாமி ராஜகோபுரங்கள் விமான கோபுரங்கள் மற்றும் மூலஸ்தான பிரதான மூர்த்திகளுக்கு மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் அதிகாலையிலேயே குவிந்து பரவசம் மிக்க சுவாமி தரிசனம் செய்தனர்.
இதையும் படிங்க: டிரம்ப் வரி விதிப்பு எதிரொலி..! கடும் வீழ்ச்சியை சந்தித்த கச்சா எண்ணெய் விலை..!