கனிம நிலவரி, மற்றும் ராயல்டி உயர்வு உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கல்குவாரி, கிரஷர் உரிமையாளர் ஏப்ரல் 16ஆம் தேதி முதல் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டு வந்தனர். இந்த நிலையில், சென்னை தலைமைச் செயலகத்தில் கல்குவாரி, கிரஷர் உரிமையாளர்களுடன் அமைச்சர் துரைமுருகன் பேச்சுவார்த்தை நடத்தினார்.
2024 ஆம் ஆண்டுக்கு முன்பு வெட்டி எடுக்கும் கனிமங்களுக்கு கனமீட்டருக்கு 56 ரூபாயாக இருந்த ராயல்டி தொகை 2024 ஆம் ஆண்டில் ராயல்டி தொகை 90 ரூபாயாக உயர்த்தப்பட்டதற்கு அப்போது எதிர்ப்பு தெரிவித்தனர். வெட்டி எடுக்கும் கனிமங்களை டன் அளவில் கணக்கிடாமல் கனமீட்டர் அளவிலேயே கணக்கிட வேண்டும் என்றும் கோரிக்கை வைத்தனர். இந்த பேச்சுவார்த்தையில் உடன்பாடு எட்டப்பட்டுள்ளது.

பேச்சு வார்த்தைக்கு பின் தமிழ்நாடு கிரஷர் லாரி உரிமையாளர்கள் சங்கத் தலைவர் பேட்டியளித்தார். அப்போது, தங்களின் கோரிக்கைகள் ஏற்றுக்கொள்ளப்பட்டதாகவும், ராயல்டி தொகை உயர்வுக்கு எதிர்ப்பு தெரிவித்த நிலையில், தங்கள் கோரிக்கை ஏற்கப்பட்டதாகவும் கூறினார். தங்கள் குறைகளை அரசுக்கு கொண்டு செல்வதற்காக தான் இந்த வேலை நிறுத்தம் நடத்தி வருவதகாவும் கூறினார். எங்களின் நியாயமான கோரிக்கை முதலமைச்சரின் பார்வைக்கு கொண்டு செல்லப்பட்டு நல்ல முடிவு எட்டப்படும் என நம்புவதாக தெரிவித்தார்.
இதையும் படிங்க: கட்சிப் பொறுப்பை உதறிய துரை வைகோ..! தந்தை வைகோவுடன் முக்கிய ஆலோசனை..!
இதையும் படிங்க: சென்னை வந்த உள்துறை அமைச்சர் அமித்ஷாவுக்கு உற்சாக வரவேற்பு.. ஆடிட்டர் குருமூர்த்தி வீட்டில் முக்கிய ஆலோசனை..!