திருத்தணியில் இருந்து சென்னை நோக்கி அரசு பேருந்து ஒன்று 30-க்கும் மேற்பட்ட பயணிகளுடன் சென்று கொண்டிருந்தது. அப்போது அதே வழியில் எதிர் திசையில் லாரி ஒன்று அங்கிருந்த கல்குவாரியில் இருந்து அதிவேகமாக சென்றதாக கூறப்படுகிறது.
இந்த நிலையில், அரசு பேருந்து திருத்தணி கேஜி கண்டிகை என்ற பகுதியில் உள்ள சாலையில் சென்றுள்ளது. அப்போது கட்டுப்பாட்டை இழந்த லாரி பேருந்து மீது மோதி விபத்துக்குள்ளானது. இதில் நிலை தடுமாறிய அரசு பேருந்து லாரி மீது மோதி நின்றது.

இந்த நிலையில் பேருந்தில் பயணம் செய்த இருவருக்கும் மேற்பட்டோர் படுகாயங்களுடன் பத்திரமாக மீட்கப்பட்டனர். ஆனால் துரதரிஷ்டவசமாக, பேருந்தில் பயணம் செய்த ஐந்து பேர் சம்பவ இடத்திலேயே.
இதையும் படிங்க: கலெக்டர் ஆபிஸ் அருகே கஞ்சா விற்பனை..? வடமாநில தொழிலாளர்கள் துணிகரம்.. கட்டிட தொழிலாளி 3 பேர் கைது..!
தகவல் அறிந்தது சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார், படுகாயமடைந்தோரை மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். இதனால் பகுதியில் சுமார் ஒரு மணி நேரத்திற்கு மேலாக போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. தொடர்ந்து சாலையின் நடுவே மோதி நின்ற அரசு பேருந்து மற்றும் லாரியை போலீசார் கிரேன் உதவியுடன் அகற்றினர்.
இதையும் படிங்க: தவெக நோன்பு திறக்கும் நிகழ்ச்சி... சுடசுட தயாராகும் உணவு வகைகள்... ஏற்பாடுகள் என்னென்ன?