கொலை, கொள்ளை மற்றும் பாலியல் குற்றங்கள் அதிகரிக்க போதை வஸ்துகள் முக்கியமான காரணிகளாக பார்க்கப்படுகின்றன. இதன் காரணமாகவே தமிழகத்தில் கஞ்சா உள்ளிட்ட போதை வஸ்துகளுக்கு தடை நீடிக்கிறது. தமிழகத்தில் கஞ்சா பயிரிடுவது பெரும்பாலும் அழித்து ஒழிக்கப்பட்டுவிட்டது. கஞ்சா விற்பனையை தடுக்க போலீசார் பல்வேறு தீவிர நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். ஏற்கனவே கஞ்சா ஆப்ரேஷன்1.0 -வில் துவங்கி கஞ்சா ஆப்ரேஷன் 4.0 வரை போலீசார் தீவிர சோதனை நடத்தினர். இதன் காரணமாக தமிழகத்தில் கஞ்சா விற்பனை பெரிதும் குறைக்கப்பட்டது. ஆனால் சமீப காலமாக வெளிமாநிலங்களில் இருந்து கஞ்சாவை ரயில் மூலம் கடத்தி வந்து தமிழகத்தில் விற்பனை செய்வது நீடித்து வருகிறது.

அதேபோல் வெளிமாநிலத்தில் இருந்து தமிழகத்திற்கு வேலைக்கு வரும் தொழிலாளர்களில் சிலர், அங்கிருந்து கஞ்சாவை கொண்டு வந்து தமிழகத்தில் விற்பனை செய்வதும் நடந்து வருகிறது. அவ்வாறு வெளிமாநிலத்தில் இருந்து கஞ்சாவை கடத்தி வந்து தமிழகத்தில் விற்பனை செய்த 3 பேரை நெல்லை போலீசார் கைது செய்துள்ளனர். திருநெல்வேலி மாவட்டம் கொக்கிர குளத்தில் உள்ள மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலகத்தில் மனுநீதி கூட்ட அரங்கு கட்டப்பட்டு வருகிறது. இதில் வெளி மாநில சேர்ந்த கட்டிட தொழிலாளிகள் பணிக்கு அமர்த்தப்பட்டுள்ளனர்.
இதையும் படிங்க: நெல்லையில் பெட்ரோல் குண்டு வீச்சு.. ரியல் எஸ்டேட் தொழிலதிபர் வீட்டில் நடந்த பயங்கரம்.. இருவர் கைது..!

இவ்வாறு இன்று பணிக்கு வந்துவர்களில் சிலர் அந்த பகுதியில் கஞ்சா விற்பனை செய்ததாக புகார் எழுந்தது. இதுகுறித்து போலீசாருக்கும் ரகசிய தகவல் கிடைத்தது. இதைத்தொடர்ந்து சந்தேகத்தின் பேரில் அங்கு பாதுகாப்புக்கு நின்று கொண்டிருந்த காவலர்கள் அங்கு நின்று கொண்டிருந்த வெளி மாநிலத்தைச் சேர்ந்த மூன்று நபர்களை பிடித்து விசாரணை மேற்கொண்டனர். மேலும் அவர்கள் கையில் வைத்திருந்த பைகளை சோதனை செய்தபோது அதில் கஞ்சா உள்ளிட்ட போதை பொருட்கள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது

இதைத்தொடர்ந்து அந்த கட்டிட தொழிலார்கள் 3 பேரை போலீசார் கைது செய்தனர். அவரிடம் விசாரணை நடத்திய போது, அவர்கள் பீகார் மாநிலத்தைச் சேர்ந்த அசோக் குமார், ராஜேஷ்குமார் மற்றும் மங்கர் சிங் ஆகியோர் என்பது தெரியவந்தது. மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலகத்தில் புதிதாக கட்டப்பட்டுள்ள கட்டிடப் பணிக்காக பீகாரில் இருந்து வந்ததாகவும் விசாரணையில் தெரிவித்தனர். மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலகத்தில் போதை பொருளுடன் மூன்று வெளி மாநில கட்டிட தொழிலாளி கைது செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது. தொடர்ந்து அவர்கள் கொண்டு வந்த போதைப் பொருள் தொடர்பாக காவலர்கள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இதையும் படிங்க: எமனாக மாறிய இ - பைக்.. பேட்டரி வெடித்து பெண் பரிதாப பலி..!