தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மக்கள் தேசம் கட்சியின் தலைவர் ஆசைத்தம்பி தலைமையில் அக்கட்சியினர் மற்றும் பாதிக்கப்பட்ட மாணவரின் குடும்பத்தினர் தூத்துக்குடி மாவட்ட ஆட்சியரிடம் கோரிக்கை மனு அளித்தனர்.
அதில், தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டம் தாலுகா அரியநாயகிபுரம் கிராமத்தில் உள்ள இந்து பறையர் வகுப்பைச் சார்ந்துள்ள தங்ககணேஷ் என்பவரின் மகன் தேவேந்திரராஜ் என்பவர் மீது சாதியைச் சொல்லி ஆபாசமாக பேசி மிரட்டி பயங்கர ஆயுதங்களால் கொலை வெறித் தாக்குதலில் ஈடுபட்ட நபர்களையும்,

அவர்களுக்கு பின்புலத்தில் இருந்து முறையாக செயல்பட்டு, இருசக்கர வாகனம், அரிவாள்கள் பணம் கொடுத்து உதவிய நபர்களை கண்டறிந்து குற்ற வழக்கில் அவர்களையும் சேர்த்தும் கைது செய்தும் விரைந்து வழக்கில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்து வழக்கினை நடத்தி தண்டணை பெற்றத்தர வலியுறுத்தப்பட்டது.
இதையும் படிங்க: தனுஷின் தந்தை கஸ்தூரிராஜாவுக்கு எதிரான வழக்கு.. சென்னை உயர்நீதிமன்றம் கூறியது என்ன..?
மேலும், பாதிக்கப்பட்ட தேவேந்திரராஜ் அரசு வேலைக்கான உத்திரவாதத்தை வழங்கியும் இழப்பீடாக ரூ.50,00,000/- வழங்கியும் அவர்களது குடும்பத்தாருக்கு உரிய பாதுகாப்பு அளிக்க கோரியும் மனு அளிக்கப்பட்டது.
இதையும் படிங்க: கட்டுமான பொருட்கள் விலை உயர்வு... ஐகோர்ட் மதுரை கிளை அதிரடி உத்தரவு..!