இன்று காலை மனதில் குரல் நிகழ்ச்சியில் பேசிய பிரதமர் மோடி காஷ்மீரில் நடந்த தீவிரவாத தாக்குதல் தொடர்பாக பேசினார். அப்போது, பகல்காம் தாக்குதல் கோழைத்தனமானது என்றும் தாக்குதலில் ஈடுபட்டவர்களுக்கு தக்க பதிலடி கொடுக்கப்படும் எனவும் பேசினார். காஷ்மீரில் சகஜ நிலை திரும்புவதை தீவிரவாதிகள் விரும்பவில்லை என்றும் பேசி இருந்தார்.

பிரதமர் மோடியின் இந்த பேச்சுக்கு பதிலடி கொடுக்கும் வகையாக அமைச்சர் மனோ தங்கராஜ் கருத்து தெரிவித்துள்ளார். தாக்கியவன் கோழையா, வீரனா என்பது இந்தியாவின் கேள்வியல்ல., 26 இந்தியர்கள் பலியாகியுள்ளனர். என்ன செய்து கொண்டிருந்தது உளவுத்துறை? ஆழ்ந்த உறக்கத்தில் இருக்கிறதா மோடி அரசு என கேள்வி எழுப்பினார்.
இதையும் படிங்க: ஒவ்வொரு உயிருக்கும் விலை கொடுக்க வேண்டி இருக்கும்.. பழி வாங்குவோம்.. பாக்.-ஐ எச்சரித்த இந்தியா!!

பழியை மற்றவர்கள் மீது திருப்பி விட்டுவிட்டு தான் தப்பித்து கொள்ள நினைப்பது கோழைத்தனமான தலைவர்கள் கையாளும் தந்திரம் என்றும் விமர்சித்துள்ளார்.
இதையும் படிங்க: தீவிரவாதிகள் எப்படி எல்லை தாண்டினார்கள் ? அசாதுதின் ஒவைசி சந்தேகம்...