கன்னியாகுமரி மாவட்டம் திற்பரப்பு பகுதியில் சிலர் யானைகளை வளர்த்து வருகின்றனர். இந்த யானைகள் குமரி மாவட்டத்தில் உள்ள கோவில்களில் நடைபெறும் திருவிழாக்களில் கலந்து கொள்ள கொண்டு செல்லப்படுவது வழக்கம். மற்ற நேரங்களில் சிறிய நிகழ்ச்சிகள், வரவேற்பு போன்ற நிகழ்ச்சிகளுக்கு யானைகளை பாகன்கள் அழைத்துச் செல்வது மூலம் பொருளீட்டி வருகின்றனர். இதேபோல் திற்பரப்பு பகுதியை சேர்ந்த ராமகிருஷ்ணன் என்பவர் தனது வீட்டில் அனுபமா என்ற யானையை வளர்த்து வருகிறார். இந்த யானையும் விழா காலங்களில் கோயிலில் நடைபெறும் நிகழ்ச்சியில் கலந்து கொள்ளும். மற்ற நேரங்களில் பாகன் அழைத்து செல்லும் இடத்திற்கு அனுபாமா செல்வது பழக்கம்.

திருவிழா இல்லாத நேரங்களில் வருவாய் குறைவான சமயங்களில் அருகில் உள்ள தோட்டத்தில் இருக்கும் பசுந்தலைகளை உணவாக கொடுப்பார். அதன்படி அனுபாமா யானையை அதன் பாகன் ராமகிருஷ்ணன், அருமனை அருகே உத்தரங்கோடு பகுதியில் தென்னை மரத்தில் இருந்து ஓலைகளை வெட்டுவதற்காக அழைத்துச் சென்றனர். தென்னை ஓலைகளை வெட்டி யானைக்கு உணவாக அளித்துள்ளார். யானை சாப்பிடும் நேரத்தில் அங்கிருந்து சென்ற ராமாகிருஷ்ணனை திடீரென காணவில்லை. சிறுது நேரம் கழித்து ராமகிருஷ்ணன் குடிபோதையில் அங்கு வந்துள்ளார். பின்னர் யானையை அழைத்துக் கொண்டு அங்கு இருந்து சென்றுள்ளார்.
இதையும் படிங்க: 50 ஆண்டுகளில் இல்லாத காட்டுத்தீ.. ஜப்பானை புரட்டிப்போடும் இயற்கை.. பாதுகாப்பான இடங்களை தேடி ஓடும் மக்கள்..!

வழிலேயே போதை அதிகமாக ஒரு கட்டத்தில் பாகன் ராமச்சந்திரன் யானையின் மேல் படுத்து உறங்கியுள்ளார். ஒரு மணி நேரத்திற்கு மேலாக யானை மேல் படுத்து உறங்கியதாக கூறப்படுகிறது. அப்போது யானை எங்கும் செல்லாமல் சாலையோரம் நின்று கொண்டிருந்தது. பாகன் கீழே விழாதவாறு அசைந்து கொண்டே இருந்தது. யானை அங்கும் இங்கும் நடமாடிக் கொண்டிருந்ததால் பொதுமக்கள் அச்சமடைந்தனர். அந்த வழியாக வந்த வாகன ஓட்டிகளும் அச்சமடைந்தனர். மணிகணக்கில் இது தொடர்ந்ததால் அப்பகுதி மக்கள் பாகனை எழுப்ப முயற்சித்தனர். ஆனால் பாகன் அருகில் யானை யாரையும் அனுமதிக்கவில்லை என கூறப்படுகிறது.

இதனை அடுத்து இதுகுறித்து அந்த பகுதி மக்கள் களியல் வனச்சரக அலுவலகத்திற்கு தகவல் கொடுத்தனர். வனச்சரக அலுவலர் முகைதீன் தலைமையில் வன ஊழியர்கள் சம்பவ இடத்திற்கு வந்தனர். போதையில் இருந்த பாகன் ராமசந்திரனை எழுப்ப முயற்சித்தனர். நிறை போதையில் தட்டு தடுமாறி எழுந்த பாகன் ராமச்சந்திரன், யானையை விட்டு கீழே இறங்கினார். தள்ளாடியபடி நின்ற பாகனிடம் யானையை ஒப்படைக்க வனத்துறையினர் மறுத்தனர். யானை அனுபமாவை பறிமுதல் செய்தனர். பின்னர் வனத்துறை அலுவலகத்திற்கு யானையை பாதுகாப்புடன் அழைத்துச் சென்றனர். அவர்களை பின்தொடர்ந்தபடியே பாகன் ராமச்சந்திரன் சென்றார். இது குறித்து யானை பாகனிடம் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. அவரை மிரட்டி, எச்சரித்து அதன் பின் வன ஊழியர்கள் யானையை ஒப்படைப்பார்கள் என கூறப்படுகிறது. இந்த சம்பவத்தால் அந்த பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
இதையும் படிங்க: டாக்டர்கள் செய்யக்கூடிய செயலா இது? மருத்துவக் கல்லூரி விடுதியில் கஞ்சா.. பயிற்சி மருத்துவர்கள் மூவர் கைது!