தமிழகத்திற்கு ஒதுக்க வேண்டிய நிதியை மத்திய அரசு ஒதுக்கா விட்டால் மத்திய அரசை கண்டித்து மக்களை திரட்டி போராட்டம் நடத்தப்படும் திண்டுக்கல்லில் ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் ஐ பெரியசாமி தெரிவித்துள்ளார்.
மகாத்மா காந்தி தேசிய ஊரக வளர்ச்சி திட்டத்தின் கீழ் 100 நாள் வேலைக்கு தமிழகத்திற்கு நிதி வழங்காமல் வஞ்சிக்கும் மத்திய அரசை கண்டித்து திண்டுக்கல் ஆத்தூ் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட பித்தளைப்பட்டி பிரிவில் அமைச்சர் ஐ. பெரியசாமி தலைமையில் திமுக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் பெண்கள் உட்பட 1000க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.

ஆர்ப்பாட்டத்திற்கு பின்பு அமைச்சர் செய்தியாளர்களிடம் பேசுகையில், 100 நாள் வேலை வாய்ப்பு திட்டத்தில் இந்தியாவிலேயே தமிழகம் தான் சிறப்பாக செயல்படுத்தி வருகிறது. கடந்த 24-25ம் ஆண்டுக்கு கொடுக்க வேண்டிய நிதியை இதுவரைக்கும் மத்திய அரசு வழங்கவில்லை காலம் தாழ்த்துவது சரி அல்ல. இல்லையென்றால் தமிழகத்தில் மத்திய அரசு கண்டித்து மிகப்பெரிய போராட்டம் நடத்தப்படும்.

இதையும் படிங்க: அரசியலில் தோற்றுப் போனவர் எடப்பாடி பழனிச்சாமி - ஆவேசமான ஐ.பெரியசாமி...!
மத்திய அரசு தமிழகத்திற்கு ஒதுக்க வேண்டிய கட்டாயம் விடுவிக்க வேண்டும் இல்லையென்றால் மக்களை திரட்டி மிகப்பெரிய போராட்டம் நடத்தப்படும். மத்திய அரசுக்கு எச்சரிக்கை விடும் வகையில் தான் இன்று முதல் கட்ட தமிழகம் முழுவதும் போராட்டம் நடத்தப்படுகிறது.

கடந்த நான்கு மாதங்களாக 4,034 கோடி விடுவிக்கப்படவில்லை ஆனால் தமிழகத்தில் 100 வேலைவாய்ப்பு திட்டத்தில் பணிகள் தொடர்ந்து நடைபெற்று தான் வருகிறது. தமிழகத்தில் 100 நாள் வேலை வாய்ப்பு திட்டம் சிறப்பாக செயல்படுத்தப்பட்டு வருகிறது. நடிகர் விஜய் 26 சட்டமன்றத் தேர்தலில் தங்களுக்கும் திமுகவுக்கும் தான் போட்டி என கூறியுள்ளார் இது குறித்த கேள்விக்கு2026 சட்டமன்ற தேர்தலில் திமுகவை போட்டியாக எந்த அணியும் போட்டியாக இருப்பது தெரியவில்லை.

இந்தியாவிலேயே ஜனநாயகத்தை நிலை நாட்டுவது தமிழகம் தான் தமிழக முதல்வர் தான் இந்திய ஜனநாயகத்தை கலைஞர் கருணாநிதி எப்படி காப்பாற்றினாரோ அதேபோல் இந்திய ஜனநாயகத்தை காப்பதற்காக முதல் தலைவராக முதல் முதலமைச்சராக தலைமை தாங்கக்கூடிய ஒரே முதலமைச்சர் தளபதியார் மட்டுமே தமிழகத்தில் மன்னராட்சி என்பது கிடையாது மக்கள் ஆட்சி நடைபெற்று வருகிறது மக்களாட்சி தத்துவத்தை உயர்த்திப் பிடித்து இருக்கின்ற ஒரே முதலமைச்சர் ஸ்டாலின் மட்டுமே என தெரிவித்தார்.
இதையும் படிங்க: 100 நாள் வேலை செய்பவர்களுக்கு ஊதிய உயர்வு.. குட் நியூஸ் சொன்ன மத்திய அரசு..!