தமிழகத்தை பொறுத்தவரை இருமொழிக்கொள்கை தான் பின்பற்றப்படும் அதை யாராலும் அசைக்க முடியாது என வனத்துறை அமைச்சர் பொன்முடி தெரிவித்துள்ளார்.

தமிழகம் முழுவதும் ஆயிரம் கூட்டுறவு முதல்வர் மருந்தகங்களை தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் காணொலி வாயிலாக திறந்து வைத்தார். அதனை தொடர்ந்து விழுப்புரத்தில் 23 மருந்தகங்களை திறக்கப்பட்ட நிலையில் சாலை சாலை அகரத்தில் கூட்டுறவு முதல்வர் மருந்தகத்தினை வனத்துறை அமைச்சர் பொன்முடி குத்துவிளக்கேற்றி துவக்கி வைத்தார்.
இதையும் படிங்க: எங்க ஊருக்குள்ளேயே வந்து விடுவாயா..? ம.செ-வை மிரட்டிய அமைச்சர்- அறிவாலயம் கதவை தட்டிய பஞ்சாயத்து..!

அதனை தொடர்ந்து பேட்டியளித்த அமைச்சர் பொன்முடி தமிழகத்தை பொறுத்தவரை இருமொழிக்கொள்கை தான் பின்பற்றப்படும் அதை யாராலும் அசைக்க முடியாது மும்மொழி கொள்கையை தமிழகத்தில் புகுத்த முடியாது ஒன்றிய அரசு எவ்வளவு நிதியை நிறுத்தினாலும் இரு மொழிக்கொள்கை தான் செயல்படுத்தப்படும் என முதல்வரே தெரிவித்துள்ளதாக வனத்துறை அமைச்சர் பொன்முடி கூறினார்.

மேலும் பேரறிஞர் அண்ணா இருமொழி கொள்கை குறித்து சொன்ன குட்டிக்கதையை சுட்டிக்காட்டிய அமைச்சர், மேலும் விழுப்புரம் மாவட்டத்தில் முதற்கட்டமாக 23 மருந்தங்கள் திறந்துள்ளதாகவும், அங்கு குறைந்த விலையில் மருத்து வாங்கியதாகவும் கூறிய அமைச்சர், இதுகுறித்து மக்கள் பலன் பெறும் வகையில் அனைவருக்கும் எடுத்துரைப்பேன் என்றார்.
இதையும் படிங்க: தமிழக அமைச்சரவையில் திடீர் மாற்றம்… ராஜகண்ணப்பனிடம் இலாகா பறிப்பு..!