அரியலூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை சார்பில் ஒருங்கிணைந்த போதை மீட்பு சிகிச்சை மற்றும் மறுவாழ்வு மையத்தினை தமிழ்நாடு முதலமைச்சர் காணொளி காட்சி வாயிலாக தொடங்கி வைத்தார். இதனையடுத்து போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர் குத்துவிளக்கேற்றி போதை மறுவாழ்வு நல மையத்தினை செயல்பாட்டிற்கு கொண்டு வந்தார்.

மேலும் போதையால் பாதிக்கப்பட்டுள்ளவர்களுக்கு வழங்கப்படும் சிகிச்சைகள் மற்றும் அவர்களுக்கான படுக்கைகளின் எண்ணிக்கை குறித்து அமைச்சர் சிவசங்கர் கேட்டறிந்தார். மேலும் போதை மறுவாழ்வு மையத்திற்கு வரக்கூடியவர்கள் தங்களது மன அழுத்தத்தை போக்கும் வகையில் அமைக்கப்பட்டிருந்த விளையாட்டு உபகரணங்கள், நூலக அறையினையும் பார்வையிட்ட அமைச்சர் சிவசங்கர் கூடுதலான புத்தகங்கள் வைக்கவும் மருத்துவர்களுக்கு அறிவுறுத்தினார். இந்நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியர் ரத்தினசாமி, ஜெயங்கொண்டம் பெரம்பலூர் சட்டமன்ற உறுப்பினர்கள், அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
இதையும் படிங்க: ஆம்ஸ்ட்ராங் படுகொலையில் கைதான நாகேந்திரன்... தனியார் மருத்துவமனைக்கு மாற்ற மறுப்பு..!
இதையும் படிங்க: கடைக்கு சென்ற பெண் கடத்தல்.. கூட்டு பாலியல் வன்கொடுமை செய்ய முயற்சி.. சிக்கிய 3 பேர்..!