உத்தரப்பிரதேச மாநிலம் அலிகார் என்ற பகுதியைச் சேர்ந்த பெண் ஒருவர் தனது மகளுக்கு வரன் தேடி வந்துள்ளார். அங்குள்ள புரோக்கர் ஒருவரின் உதவியால் அவரது மகளுக்கு நல்ல இடத்தில் மாப்பிள்ளை கிடைத்து. இதை தொடர்ந்து இரு வீட்டாரும் திருமணத்திற்கு பேசி முடிவு செய்தனர். மாப்பிள்ளையாக முடிவு செய்து நிச்சயதார்த்தமும் செய்துள்ளார். இதை அடுத்து வருகிற 16 ஆம் தேதி திருமணம் நடக்க உள்ள நிலையில், திருமண அழைப்பிதழ்கள் அச்சடிக்கப்பட்டு அனைவரும் கொடுத்து வந்தனர்.

திருமண நாள் நெருங்கியதை அடுத்து திருமண வேலைகள் விறுவிறுப்பாக நடைபெற்று வந்தது. இந்த நிலையில், அடிக்கடி மாப்பிள்ளை அந்த பெண்ணின் வீட்டிற்கு வந்ததாக கூறப்படுகிறது. இதுமட்டுமின்றி மாப்பிள்ளை தனது வருங்கால மாமியாருக்கு புதிய செல்போன் ஒன்றையும் வாங்கிக் கொடுத்துள்ளார். மாமியாரும் மருமகனும் அடிக்கடி செல்போனில் பேசிக் கொண்டிருந்தனர். உறவினர்களுக்கு சந்தேகம் ஏற்பட்டு கேட்டபோது அவர் திருமண ஏற்பாடுகள் சம்பந்தமாக பேசி வருவதாக தெரிவித்தார்.
இதையும் படிங்க: கள்ளக்காதலால் நேர்ந்த சோகம்... பெங்களூரில் நிகழ்ந்த பரபரப்பு சம்பவம்!!

ஒரு கட்டத்தில் இது காதலாக மாறிய நிலையில், இருவரும் திருமணம் செய்து கொள்ள முடிவு செய்தனர். இதை அடுத்து நேற்று முன்தினம் மகளுக்கு பார்த்து வைத்த மாப்பிள்ளையுடன் மாமியார் ஓட்டம் பிடித்தார். இருவரும் வீட்டை விட்டு வெளியேறி திருமணம் செய்திருப்பார்கள் என்றும் கூறப்படுகிறது. முன்னதாக மணப்பெண்ணின் தாயை இரவு நீண்ட நேரம் காணவில்லை என உறவினர்கள் சந்தேகம் அடைந்து மணமகனின் வீட்டிற்கு சென்று பார்த்தபோது அவரும் வீட்டில் இல்லை.

இருவரது செல்போன்களும் சுவிட்ச் ஆப் செய்யப்பட்டு இருந்துள்ளது. இதுமட்டுமின்றி தனது மகளுக்காக வாங்கி வைத்திருந்த நகைகளும் பணமும் எடுத்துக் கொண்டு அந்த பெண் சென்றுவிட்டதாகவும் கூறப்படுகிறது. இது குறித்து காவல்துறையில் புகார் அளிக்கப்பட்டதை தொடர்ந்து காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து, காணாமல் போன இருவரின் செல்போன் சிக்னலை வைத்து தேடும் பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். தனது மகளுக்கு நிச்சயம் செய்த மாப்பிள்ளையுடன் காதல் கொண்டு மாமியார் ஓடிப்போன சம்பவம் மிகவும் அதிர்ச்சியளிக்கிறது.
இதையும் படிங்க: மனைவியை காதலனுக்கே திருமணம் செய்து வைத்த கணவன்… மீண்டும் நடந்த ட்விஸ்ட்!