சென்னை உயர் நீதிமன்றம் மற்றும் மதுரை அமர்வில், அரசு சார்பில் வாதாட 39 புதிய வழக்கறிஞர்களை நியமித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. இது தொடர்பாக தமிழக பொதுத்துறை செயலாளர் வெளியிட்டுள்ள அறிவிப்பில், சென்னை உயர் நீதிமன்றம் மற்றும் மதுரை அமர்வில் அரசு தரப்பில் வாதாட வேதபகத் சிங், புருஷோத்தமன், செந்தில் முருகன், பரணிதரன், ஹர்ஷாராஜ் உள்ளிட்ட 8 வழக்கறிஞர்கள், சிறப்பு அரசு வழக்கறிஞர்களாக நியமிக்கப்பட்டிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேபோல, அஸ்வினி தேவி, சித்தார்த், சரவணன், இந்துபாலா உள்ளிட்ட 7 வழக்கறிஞர்கள் , கூடுதல் அரசு வழக்கறிஞர்கள் நியமிக்கப்பட்டிருப்பதாகவும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது. குற்றவியல் வழக்குகளில் அரசு தரப்பில் ஆஜராகும் வழக்கறிஞர்களாக பாஸ்கரன், உதயகுமார் உள்ளிட்ட 7 வழக்கறிஞர்களை நியமித்தும் அரசு உத்தரவிட்டுள்ளது.

உமாகாந்த், கருணாநிதி, வெங்கட சேசய்யா உள்ளிட்ட 16 வழக்கறிஞர்கள், உரிமையியல் தொடர்பான வழக்குகளில் அரசு தரப்பு வழக்கறிஞர்களாக ஆஜராவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது. வரி தொடர்பான வழக்குகளில், வழக்கறிஞர் செல்வி, அரசு வழக்கறிஞராக நியமிக்கப்பட்டுள்ளதாகவும், மொத்தாமாக சென்னை உயர் நீதிமன்றம் மற்றும் உயர் நீதிமன்ற மதுரை அமர்வில் 39 புதிய அரசு தரப்பு வழக்கறிஞர்கள் நியமிக்கப்பட்டுள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: "மேற்கு வங்காள சட்டசபை தேர்தலில், காங்கிரசுடன் கூட்டணி என்ற பேச்சுக்கே இடமில்லை" ; மம்தா பானர்ஜி திட்டவட்டம்
சட்டத்துறை அமைச்சர் ரகுபதி நேற்று பேசும்போது, திமுக ஆட்சியில் புகார் அளித்தால் நியாயம் கிடைக்கும் என்ற நம்பிக்கை பெண்களுக்கும், பொதுமக்களுக்கும் ஏற்பட்டுள்ளதால் தான் அதிக அளவிலான புகார்கள் சமீபமாக பெறப்படுவதாக கூறியிருந்தார். அந்த வழக்குகளை எதிர்கொள்ள அரசுத் தரப்பும் தயாராக வேண்டி உள்ளது. இதன் பின்னணியிலேயே அரசுத் தரப்பில் வாதாட கூடுதல் வழக்கறிஞர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.
இதையும் படிங்க: 26 ரபேல் போர் விமானங்கள், 3 நீர்மூழ்கி போர்க் கப்பல்கள்.. இந்தியா - பிரான்ஸ் இடையே ஒப்பந்தம் கையெழுத்தாகிறது..