மதுரையில் உள்ள திருப்பரங்குன்றம் மலை மீது காசி விஸ்வநாதர் கோயில் மற்றும் சிக்கந்தர் பாதுஷா தர்கா அமைந்துள்ளது. நீண்ட காலமாக இரு மதத்தைச் சேர்ந்த மக்களும் எந்தவித சிக்கலும் இல்லாமல் தங்களின் விருப்பத்திற்கு ஏற்ப வழிபாடு நடத்தி வந்தனர். இந்நிலையில், ஆடு, கோழி பழி கொடுப்பது தொடர்பாக இஸ்லாமியர்களுக்கும் இந்து அமைப்பினருக்கும் இடையே மோதல் ஏற்பட்டுள்ளது. Also Read செக்யூரிட்டியால் விரட்டப்பட்ட 700 ஊழியர்கள்! Infosys அட்டூழியம்! நாராயண மூர்த்தி பேச்சு இதற்குதானா இந்நிலையில் மதுரை பழங்காநத்தத்தில் நேற்று இந்து அமைப்புகள் சார்பில் ஆயிரக்கணக்கானோர் குவிந்து ஒரு மணி நேரம் ஆர்ப்பாட்டம் நடத்தினர். இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில், ''திருப்பரங்குன்றம் பிரச்சினையை முதலில் கையில் எடுத்தது காங்கிரஸ் கட்சி. திருப்பரங்குன்றம் எம்.எல்.ஏ என்பது எத்தனை நபர்களுக்கு தெரியும்?'' எனக் கேட்டு பழைய வரலாற்றை தனது எக்ஸ்தளத்தில் பதிவிட்டுள்ளார் வழக்கறிஞரும், அரசியல் விமர்சகருமான கே.எஸ்.ராதாகிருஷ்ணன். அதில், ''திருப்பரங்குன்றம் பிரச்சினையை முதலில் கையில் எடுத்தது காங்கிரஸ் கட்சி. திருப்பரங்குன்றம் எம்.எல்.ஏ என்பது எத்தனை நபர்களுக்கு தெரியும் .??
இதையும் படிங்க: திருப்பரங்குன்றம் விவகாரம்… ஓரணியில் திரண்ட திமுக கூட்டணிக் கட்சிகள்..! 'பலியாடாகும்' மாவட்ட ஆட்சியர் சங்கீதா..!
1920கள் துவங்கி 1931 வரை உச்சம் பெற்ற திருப்பரங்குன்றம் சிக்கந்தர் தர்ஹா பிரச்சினை முடிவுக்கு வந்தது லண்டன் பிரிவி கவுன்சில் தீர்ப்பின் அடிப்படையில்.அதற்கு பிறகு ஆண்டுக்கு ஒரு முறை என்று சிறிது சிறிதாக உருவெடுத்த சிக்கந்தர் தர்ஹா விசயம் நெல்லித் தோப்பு, அன்னச்சத்திரம் ஆக்கிரமிப்பு என்று விஸ்வரூபம் எடுத்து வந்த நிலையில் 1957ல் மலை உச்சியில் சிக்கந்தர் தர்ஹா செல்லும் இஸ்லாமியர்கள் பச்சை நிற கொடியை பறக்க விட்டனர்
.
அந்த கொடிகள் பாகிஸ்தான் கொடிகளின் சாயலில் இருந்ததை கண்டு முதல் முதலில் அதை தடுக்கும் பொருட்டு களத்தில் அறவழிப் போராட்டத்தை எடுத்து ஒட்டுமொத்த தமிழகத்தையும் திரும்பி பார்க்க வைத்த தன்மானமிக்க இந்துவாக இருந்த நபர் தான் திருப்பரங்குன்றம் சட்டமன்ற தொகுதியின் உறுப்பினராக இருந்த காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த சின்ன கருப்ப தேவர் அவர்கள்.
அன்றைய நாட்களில் கிட்டத்தட்ட 700 க்கும் அதிகமான பொது மக்களை ஒன்று திரட்டி மிகப்பெரிய போராட்டத்தை செய்து திருப்பரங்குன்றம் மலை உச்சியில் பறக்கவிட்ட அந்த பச்சை நிற கொடிகளை எல்லாம் அப்புறப்படுத்த வைத்த வெற்றி போராட்டத்தை செய்தார். 1931 லண்டன் பிரிவி கவுன்சில் தீர்ப்புகளை மேற்கோள் காட்டிய சின்ன கருப்ப தேவர் இந்துக்களுக்கான நீதியை பெற்றுக் கொடுத்தார். ஆனால் இன்றைக்கு அனைத்து கட்சி கூட்டம் என்ற பெயரில் புனித மலையில் ஆடு, கோழி பலியிடுவதற்கு ஆதரவாக செயல்பட்டதோடு அல்லாமல், திருப்பரங்குன்றம் சென்று சிக்கந்தர் தர்காவில் வழிபட்டு சமத்துவத்தை போதிப்பதாக சொல்கிறது இன்றைய காங்கிரஸ் கட்சி.

இந்து விரோதத்தை செய்வதையும் நாளைய வரலாறு பேசும். காங்கிரஸ் கட்சியில் இருந்த கடைசி தன்மானமிக்க என்று அடையாளப்படுத்த வேண்டிய நபர் திருப்பரங்குன்றத்தினுடைய சட்டமன்ற உறுப்பினராக இருந்த அய்யா சின்ன கருப்ப தேவர் அவர்களே. இவர் 1957 முதல் 1967 வரை திருப்பரங்குன்றம் சட்டமன்ற உறுப்பினராக இருந்திருக்கிறார். திருப்பரங்குன்றம் பஞ்சாயத்து போர்டின் தலைவராக ஆகவும் 1941 முதல் பதவி வகித்துள்ளார்'' எனத் தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க: துடைப்பத்தை எட்டு எட்டாய் வெட்டி எறிந்த கை… அரவிந்த் கெஜ்ரிவாலை காவு வாங்கிய காங்கிரஸ்..!