பாராளுமன்ற தேர்தல், வேறு சட்டமன்ற தேர்தல், இரண்டு தேர்தலும் ஒரே மாதிரி இருக்காது தேர்தல் அறிவித்த பின்னர் எந்த கூட்டணி என்று முடிவு செய்ய வேண்டும் என இந்திய ஜனநாயக கட்சியின் தலைவர் ரவி பச்சைமுத்து தெரிவித்துள்ளார். இயல் இசைத்தென்றல் எம்.கே.தியாகராஜ பாகவதரின் 116 ஆவது பிறந்தநாளை முன்னிட்டு அவர் பிறந்த மாவட்டமான திருச்சி மத்திய பேருந்து நிலையம் அருகிலுள்ள அவரது மணிமண்டபத்தில் இந்திய ஜனநாயக கட்சியின் தலைவர் ரவிபச்சைமுத்து தலைமையில்
தியாகராஜபாகவதர் சிலைக்கு நூற்றுக்கும் மேற்பட்டோர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

தொடர்ந்து செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த ரவி பச்சைமுத்து கூறியதாவது, ஏ.டி பன்னீர்செல்வம் சேவை எண்ணம் கொண்டவர். அவரது மணி மண்டபம் நல்லா பராமரிப்பு உள்ளது. இன்னும் நன்றாக பராமரிக்க வேண்டும். தேர்தலை பற்றி தற்போது பேச வேண்டாம். எந்த ஒரு பெரிய கட்சியாக இருந்தாலும் தங்களின் நிலைத்து வைத்துக்கொள்ள முயல்வார்கள். பாராளுமன்ற தேர்தல், வேறு சட்டமன்ற தேர்தல், இரண்டு தேர்தலும் ஒரே மாதிரி இருக்காது. தேர்தல் அறிவித்த பின்னர் எந்த கூட்டணி என்று முடிவு செய்ய வேண்டும் என்று தெரிவித்தார்.
இதையும் படிங்க: மீண்டும் மொழி போர்கொடி..! திருச்சி பன்னாட்டு விமான நிலையத்தில் எழுந்த சர்ச்சை..!

மும்மொழி கொள்கையை குறித்த கேள்விக்கு, கட்சிக்கு அப்பாற்பட்டு நான் தெரிவிக்கிறேன், நான் பல்வேறு இடங்களுக்கு பயணம் செய்திருக்கிறேன். இருமொழிக் கொள்கையில் எனக்கு நம்பிக்கை கிடையாது. அவர் அவர்களுக்கு தாய்மொழி முக்கியம். மொழி என்பது தொடர்பு மொழி மட்டும்தான். எந்த மொழி தேவையோ அந்த வகையில் மும்மொழி மொழியை காண வேண்டும். ஹிந்தியை திணிக்க வேண்டும் என கூறக்கூடாது என்று திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.

zதொடர்ந்து நடிகர் விஜய் குறித்த கேள்விக்கு, விஜய் தற்போது எல்லாம் பார்த்து வருகிறார்கள். போகப் போகத்தான் அவருடைய செயல்பாடுகள் தெரியும் என மேல்வாரியாக பதிலளித்தார். தொடர்ந்து இந்த நிகழ்ச்சியில் நிர்வாகிகள் அமுதனடிகள் சபரி ராஜ் ரகுபதி செந்தில் அதிபன் உட்பட ஏராளமானோர் பங்கேற்றனர்.
இதையும் படிங்க: துப்புக்கெட்ட நாயே சீமான்... உன்னுடன் படுத்தது எனக்குத்தான் கேவலம்..! வெளுத்து வாங்கிய விஜயலெட்சுமி..!