கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளி அடுத்த சோமனூர் அரசு உயர்நிலைப் பள்ளியில் ஆண்டு விழா நிகழ்ச்சி கடந்த சில தினங்களுக்கு முன்பு நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் மாணவர்கள் ஆசிரியர்கள் பெற்றோர்கள் என ஏராளமானோர் பங்கு பெற்றனர்.

மேலும் ஆண்டு விழாவின் ஒரு பகுதியாக நடனம் உள்ளிட்ட பல்வேறு கலை நிகழ்ச்சிகளும் நடைபெற்றன. இந்நிலையில் இந்த நிகழ்ச்சியில் மாணவர்கள் சிலர் பாமக கொடியுடன் நடனமாடினர். இந்த சம்பவம் ஆசிரியர்கள் மட்டும் இன்று பெற்றோர்கள் என அனைவரது மத்தியிலும் வரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. மாணவர்கள் ஆடிய வீடியோவானது சமூக வலைதளங்களில் பகிரப்பட்டு நெடிசன் களின் எதிர்மறை கருத்துக்களை பெற்றது.
இதையும் படிங்க: முழு இஸ்லாமியராகவே மாறிட்டாரே... தலையில் குல்லா, வெள்ளை லுங்கி சட்டையில் மாஸ் என்ட்ரி கொடுத்த விஜய்...!
பள்ளிகளுக்குள் அரசியல் செல்வது மிகவும் அபத்தமானது என்று பலரும் கருத்து தெரிவித்து வந்தனர். அதுமட்டுமின்றி பள்ளி மாணவர்கள் குறிப்பிட்ட கட்சி கொடியை பயன்படுத்தக் கூடாது என பள்ளி நிர்வாகம் ஏன் தடுக்கவில்லை என்றும் பொது நிகழ்ச்சிக்கு முன்னர் தலைமை ஆசிரியர் என்ன செய்து கொண்டு இருந்தார் என்றும் கேள்விகளை அடுக்கினர் நெட்டிஷன்கள்.

இந்த விவகாரம் விஸ்வரூபம் எடுத்த நிலையில், மாவட்ட கல்வி அலுவலர்கள் என அனைவரின் கவனத்திற்கு சென்றது. இந்த நிலையில் தான் அரசு பள்ளி ஆண்டுவிழா நிகழ்ச்சியில் பாமக கொடி பயன்படுத்திய விவகாரத்தில் ஏழு நாட்களுக்குள் விளக்கம் அளிக்க தமிழாசிரியர் சுப்பிரமணி தலைமையாசிரியர் விஜயகுமார் ஆகியோருக்கு மாவட்டம் முதன்மை கல்வி அலுவலர் முனிராஜ் உத்தரவிட்டார். அவை மட்டும் இன்றி விளக்கம் ஏற்றுக்கொள்ள முடியாத பட்சத்தில் இருவர் மீதும் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தீர்க்கமாக தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க: தமிழக வனத்துறையில்புதிதாக கால்நடை மருத்துவ பணியிடங்கள்.. முதல்வர் ஒப்புதல்!