சேலம் மாவட்டம் கிச்சிபாளையம் எஸ் எம் சி காலனி பகுதியைச் சேர்ந்தவர் ஜான் என்கிற சாணக்யா. (வயது 35). இவரது மனைவி சரண்யா. இவர்களுக்கு ஒருமகளும் ஒரு மகனும் உள்ளனர். ஜான் என்கிற சாணக்கியன் மீது சேலம் மாவட்டத்தில் கிச்சிபாளையம், அன்னதானப்பட்டி செவ்வாய்பேட்டை உள்ளிட்ட பல்வேறு காவல் நிலையங்களில் கொலை முயற்சி உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளது.
இந்த நிலையில் தற்போது ஜான் என்கிற சாணக்கியா மற்றும் அவரது மனைவி சரண்யா ஆகிய இருவரும் திருப்பூரில் உள்ள பெரிய பாளையம் பகுதியில் குடியிருந்து வருகிறார். மேலும் இவர் தற்போது இரு சக்கர மற்றும் நான்கு சக்கர வாகனங்களுக்கு லோன் தரும் நிதி நிறுவனம் ஒன்றினையும் நடத்தி வருகிறார்.

இந்த நிலையில் சேலத்தில் மாவட்டம் அன்னதானப்பட்டியில் உள்ள காவல் நிலையத்தில் வழக்கு ஒன்றிக்காக கையெழுத்து ஈடுவதற்காக ஜான் என்கிற சாணக்கியா மற்றும் அவரது மனைவி சரண்யா ஆகிய இருவரும் காரில் சென்றுள்ளனர். போலீஸ் ஸ்டேஷனில் கையெழுத்து இட்டுவிட்டு, மீண்டும் திருப்பூரை நோக்கி அவர்களது காரில் வந்து கொண்டு இருந்தனர்.
அப்போது ஈரோடு அடுத்த நசியனூர் கோவை சேலம் தேசிய நெடுஞ்சாலையில் வந்து கொண்டிருந்த போது, இவர்களது காரை பின் தொடர்ந்து மற்றோரு காரில் வந்த மர்ம நபர்கள் இவர்களது காரின் மீது மோதியது. ஜான் என்ற சாணக்யா காரை நிறுத்தி, யார் இடித்தது.. பார்த்து வரமாட்டிர்களா? என கேள்வி எழுப்பி உள்ளார்.
இதையும் படிங்க: தினமும் காதல் கணவன் டார்ச்சர்... கொலையில் முடிந்த மனைவியின் தற்கொலை!!

அப்போது மற்றொரு காரில் வந்தவர்கள், ஜான் என்ற சாணக்யா காரை நிறுத்திய உடனே காரில் இருந்து இறங்கி, ஜானை சரமாரியாக வெட்டத் துவங்கினர். தடுக்க வந்த மனைவி சரண்யாவுக்கும் வெட்டு விழுந்தது. இருவரும் ரத்த வெள்ளத்தில் துடிப்பதை நின்று பார்த்துவிட்டு அந்த கும்பல் அங்கிருந்த அந்த கும்பல் தப்பி சென்றுவிட்டனர். இதில் சம்பவ இடத்திலேயே ஜான் இறந்தார். கொலை சம்பவத்தை தடுக்க சென்ற அவரது மனைவி சரண்யாவிற்கு கைகளில் வெட்டுப்பட்டத்தை தொடர்ந்து அவர் நசியனூர் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

இதுகுறித்து தகவல் அறிந்த சித்தோடு போலீசார் ஸ்பாட்டுக்கு சென்று சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக பிரேத பரிசோதனைக்காக பவானி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். சித்தோடு போலீசார் உடனே அனைத்து செக் போஸ்டுகளையும் அலார்ட் செய்தனர், தகவல் அறிந்ததும் சம்பவ இடத்திற்கு சென்ற ஈரோடு எஸ்பி ஜவகர் போலீசாரிடம் விசாரித்தார்.

முதற்கட்ட விசாரணையில் இறந்த ஜான் மீது 2 கொலை வழக்கு உட்பட 15க்கும் மேற்பட்ட வழக்குகள் இருப்பது தெரியவந்தது. இந்த சம்பவத்தை தொடர்ந்து ஈரோடு முழுக்க செக்போஸ்ட்கள் உஷார் படுத்தப்பட்டது. ஈரோடு பச்சபாளிமேடு அருகே கொலை செய்த கும்பல் தப்பி செல்வதாக போலீசுக்கு தகவல் வந்தது. ஜான் கொலையில் தொடர்புடைய மூன்று பேரை போலீசார் சுற்றி வளைத்தனர்.

அப்போது கும்பல் போலீசையும் தாக்கியுள்ளது. இன்ஸ்பெக்டர் ரவி, ஏட்டு லோகநாதன் காயம் அடைந்தனர். இதையடுத்து கொலை குற்றவாளிகளை போலீசார் துப்பாக்கிச்சூடு நடத்தி பிடித்தனர். பிடிபட்ட 4 பேர் பெருந்துறை அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அட்மிட் செய்யப்பட்டுள்ளனர். முன்விரோதம் காரணமாக இந்த கொலை நடந்திருக்கலாம் என போலீசார் கூறினர்.
ஈரோட்டில் பட்டபகலில் காரில் சென்ற ரவுடி வெட்டி கொலை செய்யப்பட்டதும், குற்றவாளிகளை போலிசார் துப்பாக்கி சூடு நடத்தி கைது செய்ததும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
இதையும் படிங்க: மனைவி நடத்தையில் சந்தேகம்.. ஒன்றரை வயது குழந்தை அடித்து கொலை.. நாடகமாடிய தந்தை கைது..!