கடந்த சில தினங்களுக்கு முன்பு கிருஷ்ணகிரி அருகே மழையில் இளைஞர்கள் சிலர் மது போதையில் இருந்ததாக கூறப்படுகிறது. அப்போது பெண் ஒருவர் மலை மேல் இருந்த கோவிலுக்கு சென்றுள்ளார். இந்நிலையில் மது போதையில் இருந்த இளைஞர்கள் அப்பெண்ணை மிரட்டி பாலியல் வன்கொடுமையில் ஈடுபட்டதுடன் அப்ப என்னிடம் வழிப்பறி செய்துள்ளனர். இது குறித்து அப்பெண் அழைத்த புகாரின் அடிப்படையில் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இந்நிலையில் அந்தப் பெண் அளித்த புகார் அடிப்படையில் நான்கு இளைஞர்கள் மீதும் போலீசார் வழக்கு பதிவு செய்து, நால்வரையும் தேடி வந்தனர். இதில் இருவர் கைது செய்யப்பட்ட நிலையில், தலைமுறைவாக இருந்த இருவரை போலீசார் வலை வீசி தேடி வந்தனர். இந்த நிலையில் தான் இன்று பொன்மலை குட்டை பெருமாள் கோவில் அருகே இரண்டு பேரும் பதுங்கி இருப்பதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இந்த தகவலின் அடிப்படையில் போலீசார் இருவரையும் சுற்றி வளைக்கவே, அவர்கள் இருவரும் போல சாரிடமிருந்து தப்ப முயன்றனர்.
இதையும் படிங்க: திடீரென உயர்ந்த மேட்டூர் அணை உயர் மட்டம்.. காவிரி ஆற்றில் திருப்பி விடப்பட்ட தண்ணீர்..!

அப்போது குற்றவாளிகள் போலீசாரை கத்தியால் தாக்கியதில் இரண்டு போலீசார் காயமடைந்தனர். வாத்தியார் தாக்கி விட்டு தப்ப முயன்ற குற்றவாளிகளை போலீசார் துப்பாக்கியால் சுட்டதில், சுரேஷ் என்ற குற்றவாளிக்கு காலில் காயம் ஏற்பட்டது. பின்னர் நாராயணன் என்ற குற்றவாளிக்கு காலில் முறிவு ஏற்பட்டதை அடுத்து போலீசார் அவர்கள் இருவரையும் மடக்கிப் பிடித்தனர். தொடர்ந்து நால் வருடமும் போலீசார் விசாரணை மேற்கொண்டு வரும் நிலையில் இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படிங்க: பர்வேஷ்க்கு பதில் ரேகா குப்தா முதல்வராக தேர்ந்தெடுக்கப்பட்டது ஏன்?? வெளி வராத தகவல்கள்..!