உலக கத்தோலிக்க கிறிஸ்தவ மதத் தலைவர் ஆன போப் ஆண்டவர் என அழைக்கப்படும்போப் பிரான்சிஸ் சுவாச பாதையில் இரண்டு பரிசோதனைகளை மேற்கொண்ட மருத்துவர்கள் அவரது நுரையீரலில் உள்ள ஏராளமான சளியை கருவி உதவியுடன் உறிஞ்சி எடுத்தனர். போப் பிரான்சிஸ் தொடர்ந்து தீவிர மருத்துவ சிகிச்சையில் உள்ளார்.
சிகிச்சை அளிக்கும் மருத்துவர்களுக்கு ஒத்துழைப்பு அளிக்கிறார். எனினும் அவருக்கு அளிக்கப்படும் சிகிச்சை குறித்த விவரங்கள் அதிகாரப்பூர்வமாக வெளியிடப்படவில்லை. புதிய சுவாச கோளாறு என்பது ஒரு புதிய பின்னடைவு என்று மருத்துவர்கள் கூறுகின்றனர். அவருக்கு ஏற்கனவே ஒரு நுரையீரல் நீக்கப்பட்டிருக்கிறது.

போப் பிரான்சிஸுக்கு அளிக்கப்படும் சிகிச்சை குறித்து கருத்து தெரிவித்த ஜான் கோல்மன் என்ற மருத்துவர், "கடந்த வெள்ளிக்கிழமை நிலவரத்தை விடவும், இப்போதைய நிலவரம் கவலைக்கு உரியது தான். இப்போது அவருக்கு முகக் கவசத்துடன் கூடிய சுவாசம் அளிக்கப்பட்டு வருகிறது. இது ஒரு சிலநாட்களுக்கு மட்டும்தான். அதன் பின்னர் இது தேவைப்படாது, என்பது ஒரு புதிய பின்னடைவு என்று மருத்துவர்கள் கூறுகின்றனர். அவருக்கு ஏற்கனவே ஒரு நுரையீரல் நீக்கப்பட்டிருக்கிறது.
இதையும் படிங்க: போப் ஆண்டவர் உடல் நிலையில் சிறிய முன்னேற்றம்: முன் கணிப்பை வெளியிடாமல் தவிர்க்கும் மருத்துவர்கள்
இந்த நிலையில் வாடிகன் தேவாலயம் தரப்பில் அளிக்கப்பட்ட தகவலில், "போப் பிரான்சிஸ் நுரையீரலில் சளி சேர்ந்திருக்கிறது. மூச்சுக்குழாய் அழற்சியும் உள்ளது, என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

போப் பிரான்சிஸ் உடல்ரீதியாக அன்றாட அலுவல்களில் ஈடுபடக்கூடியவராக இல்லை. சர்க்கர நாற்காலியில் அமர்ந்தபடியே அலுவல்களில் ஈடுபட்டு வந்தார். மேலும் அதிக உடல் எடை காரணமாகவும் அவர் பாதிக்கப்பட்டிருந்தார். நுரையீரல் செயல்பாட்டை மேம்படுத்துவதற்காக தொடர்ந்து அவர் சுவாசத்துக்கான பிசியோதெரபி சிகிச்சை எடுத்துக் கொண்டிருந்தார். எனினும், அவரது நுரையீரலில் சளி அதிக அளவு சேர்ந்து விட்டது. தீவிரமாக இருமல் காரணமாகவும் பாதிக்கப்பட்டிருந்தார்.

உடல்நலக் கோளாறு காரணமாக போப் பிரான்சிஸ் கடந்த பிப்ரவரி 14ஆம் தேதி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். அது முதல் போப் பிரான்ஸ் குறித்த புகைப்படம், வீடியோ எதுவும் வெளியிடப்படவில்லை. 12 ஆண்டுகால போப் பதவியில் நீண்டகாலமாக அலுவலகத்துக்கு செல்லாமல் இருந்தது இப்போதுதான் என்று வாடிகன் தேவாலய வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. 1981ஆம் ஆண்டு ஜான் பால் போப் ஆக இருந்தபோது சிறிய ஆபரேஷன் ஒன்றுக்காக 55 நாட்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார்.
இதையும் படிங்க: மரணத்தின் அருகே போப் ஆண்டவர்.. குணம் அடைய உலகம் முழுவதும் பிரார்த்தனை..!