வண்ணங்களின் திருவிழாவான ஹோலி பண்டிகை நாடு முழுவதும் கடந்த மார்ச் 14 ஆம் தேதி கோலாகலமாக கொண்டாடப்பட்டது. வடமாநிலத்தவர்கள் அதிகமாக வசித்துவரும் பகுதிகளில் பொதுவாகவே ஹோலி பண்டிகை களை கட்டும் என்றாலும், சமீப காலமாக வடக்கு, தெற்கு, கிழக்கு மேற்கு என்ற கணக்கு இல்லாமல், அனைத்து பகுதி மக்களுமே ஹோலி பண்டிகையை கொண்டாடி மகிழ்கின்றனர். பெண்கள், இளைஞர்கள், சிறுவர், சிறுமியர் பல வண்ணப் பொடிகளை ஒருவர் மீது ஒருவர் எறிந்தும், வண்ணப் பொடிகளைப் பூசியும் கோலாகலமாக ஹோலி பண்டிகையைக் கொண்டாடினர்.

மாணவர்களும் இதேபோல மகிழ்ச்சியை பகிர வேண்டும் என்பதற்காக, சில பள்ளி, கல்லூரிகளிலும் ஹோலி பண்டிகை கொண்டாட்டத்திற்கு அனுமதி அளிக்கப்பட்டிருந்தது. சில கட்டுப்பாடு விதிமுறைகளும் அதில் பின்பற்றப்பட்டன. இந்நிலையில் ஆந்திராவில் ஒரு பள்ளியில் நடந்த ஹோலி பண்டிகையில் அப்பள்ளி தலைமை ஆசிரியரே மாணவிகளிடம் தவறாக நடந்து கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. அந்த பள்ளியில் தலைமையாசிரியரே மாணவிகளிடம் ஆபாசமாக நடந்துக் கொள்வதும், கலர் பூசுவதாக கூறி ஆபாசமாக கட்டிப்ப்பிடிப்பது போன்ற வீடியோ வெளியாகி பெற்றோரை அதிர்ச்சி அடைய செய்தது.
இதையும் படிங்க: மார்க் வேணுமா? வேலை வேணுமா? மாணவிகளை சீரழித்த பேராசிரியர்.. 30 மாணவிகளின் 60 ஆபாச வீடியோ..!

ஆந்திர மாநிலம் சத்யசாய் மாவட்டம் புட்டபர்த்தி நகரில் தனியாருக்கு சொந்தமான, பெண்கள் மேல்நிலைப்பள்ளி ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்தப் பள்ளியில் தலைமை ஆசிரியராக வெங்கடபதி என்பவர் பணிபுரிந்து வந்தார். இந்த பள்ளியில் கடந்த சில நாட்களுக்கு முன்பு ஹோலி கொண்டாட்டம் நடைபெற்றது. அப்போது மாணவிகள், ஒருவர் மீது மற்றோருவர் வண்ணங்களை பூசி ஹோலி கொண்டாட்டத்தில் மகிழ்ச்சியாக ஈடுபட்டிருந்தனர். அப்போது அங்கு வந்த தலைமை ஆசிரியர் வெங்கடபதி, ஹோலி கொண்டாடுகிறேன் பேர்வழி என்ற பெயரில் மாணவிகளிடம் அத்துமீறி நடந்து கொண்டார். வண்ணங்கள் பூசும் சாக்கில் மாணவிகள் உடல் மீது தவறாக தொட்டு தீண்டி உள்ளார்.

சில மாணவிகளை கட்டிப்பிடித்து முத்தம் கொடுப்பது போலவும் செய்துள்ளார். இந்த கொடுமைகளால் அப்பள்ளி மாணவிகள் அறுவருப்பில் நெழிந்துள்ளனர். இதனை அக்கம் பக்கத்து வீட்டிலுள்ள பெண்கள் தங்களது செல்போனில் வீடியோ எடுத்துள்ளனர். இந்த வீடியோவை மாணவிகளின் பெற்றோருக்கு உடனடியாக அனுப்பி வைத்ததாக கூறப்படுகிறது. வீடியோவை பார்த்து அதிர்ச்சி அடைந்த பெற்றோர், உடனடியாக பள்ளிக்கு விரைந்தனர்.
தலைமை ஆசிரியர் வெங்கடபதியிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இது குறித்து காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. இதையடுத்து பள்ளி தலைமை ஆசிரியர் வெங்கடபதியை கைது செய்த போலீசார் தீவிர விசாரணைக்குப்பிறகு அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்துள்ளனர்.
இதையும் படிங்க: போலீஸ் ஸ்டேசனில் பெண் போலீசிடம் அத்துமீறல்.. ஆபாச படத்தை போட்டு காமித்து போதையில் சப்-இன்ஸ் அராஜகம்..!