நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமானுக்கு எதிராக தெலுங்கு முன்னேற்றக் கழகத்தினர் போராட்டத்தில் ஈடுபட்டனர். தெலுங்கர்கள் குறித்து தொடர்ந்து சீமான் அநாகரிகமாக பேசி வருவதாக தெலுங்கு முன்னேற்றக் கழகத்தினை குற்றம் சாட்டியுள்ளனர்.

விடுதலைக்காக போராடிய வீரபாண்டிய கட்டபொம்மனை சீமான் இழிவு படுத்துவதை ஏற்றுக்கொள்ள முடியாது என்று கூறிய அவர்கள், தெலுங்கர்கள் வேண்டாம் என்றால் தனது மனைவி கயல்விழியை சீமான் வீட்டை விட்டு அனுப்பி விடுவாரா என கேள்வி எழுப்பினார்கள். தெலுங்கர்கள் குறித்து அநாகரீகமாக பேசுவதை சீமான் நிறுத்தாவிட்டால் விளைவுகள் மோசமாக இருக்கும் என்றும் அவர்கள் எச்சரித்தனர்
இதையும் படிங்க: தீவிரவாத தாக்குதல் பாதுகாப்பு துறையின் தோல்வி... சீமான் பகீர் குற்றச்சாட்டு..!

இது தொடர்பாக தெலுங்கு முன்னேற்றக் கழகத்தின் தொண்டரான பெண் ஒருவர் பேசுகையில், தெலுங்கு வரக்கூடாது என்கிறார்., என்னப்பா தெலுங்கு, நீயும் மனுஷன் நானும் மனுஷன்., எல்லா மக்களுக்காகவும் போராட்டம் செய்தவர் வீரபாண்டிய கட்டபொம்மன்., எங்களைப் பற்றி மேடையில் ஏன் பேசுகிறார் சீமான்., உங்கள் வீட்டில் வாழ்வது தெலுங்கு பிள்ளை தானே., அவரை வெளியேற்று அப்புறம் பேசுங்கள்., இனிமேல் தெலுங்கு என்ற வார்த்தையை உங்க வாயில் வரக்கூடாது அதை மீறி பேசினால் நாங்கள் எதற்கும் தயாராக இருப்போம்.,

உயிரையும் கொடுப்போம்., உயிரை எடுக்கவும் தயங்க மாட்டோம் என ஆவேசமாக பேசினார்... சீமான் பாஞ்சாலங்குறிச்சி படம் எடுத்த போது அவருக்கு உறுதுணையாக இருந்தது நாங்கள் தான் எனவும் தெரிவித்தார்.
இதையும் படிங்க: உரிமையை பறி கொடுத்துவிட்டு புலம்புவது அண்டர் கண்ட்ரோல்... நக்கலடித்த சீமான்..!