தமிழகத்தில் கோடை வெயில் நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றது. இதனை எடுத்தது பொதுமக்களில் பாதுகாப்பாக இருக்கும்படி பொது சுகாதாரத்துறை எச்சரிக்கை கொடுத்துள்ளது. இதுகுறித்து செய்தியாளர்களை சந்தித்த பொது சுகாதாரத்துறை இயக்குனர் செல்வ விநாயகம் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், கோடை வெயில் ஆரம்பித்துள்ள நிலையில் பொதுமக்கள் தங்களை வெப்ப நிலையில் இருந்து தற்காத்துக் கொள்ள பல்வேறு பாதுகாப்பு முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும் என அறிவுறுத்தியுள்ளார்.

மேலும் கோடை காலத்தில் அதிக அளவில் மோர், இளநீர், உப்பு மற்றும் உப்பு கலந்த எலுமிச்சை சாறு உள்ளிட்டவற்றை எடுத்துக் கொள்ளலாம் என்றும் உடலில் இருந்து வெளியேறும் வியர்வை எளிதில் இந்துவதற்கு வழி வகுக்கும் வகையில் மிருதுவான தளர்ந்த காற்றோட்டம் உள்ள பருத்தி ஆடைகளை அணிய வேண்டும் என்றும் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
இதையும் படிங்க: மார்ச் 25 வரை டாஸ்மாக் மீது மேல் நடவடிக்கைக் கூடாது.. அமலாக்கத்துறைக்கு நீதிமன்றம் உத்தரவு..!

தொடர்ந்து மயக்கம், உடல் சோர்வு, அதிக அளவில் தாகம், தலைவலி, மணிக்கட்டு, அடி வயிற்றில் வலி என உடல் பாகங்களில் வலி ஏற்பட்டால் தாமதிக்காமல் அருகில் உள்ள மருத்துவமனையில் உடனடி சிகிச்சை பெற வேண்டும். முன்னதாக வெப்பநிலை அதிகரிக்கும் பட்சத்தில், அதிகப்படியானோர் வெப்ப வாதத்தால் பாதிக்கப்படுவ வாய்ப்பு உள்ளது. அவ்வாறு வெப்ப வாதத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு காய்ச்சலை குறைக்கும் நோக்கத்துடன் பாராசிட்டமல் ஆஸ்பிரின் ஆகிய மாத்திரைகளை மருத்துவர்கள் வழங்குவர்.

ஆனால் சிலர் ஆஸ்பிரின், பாராசிட்டமால் உள்ளிட்ட மாத்திரைகளை மருத்துவர்களின் பரிந்துரை இல்லாமல் பயன்படுத்துகின்றனர். இதனால் பெரும் பின் விளைவுகள் ஏற்படுவதற்கு அதிக அளவில் வாய்ப்புள்ளதாக வாய்ப்புள்ளதனால், இது போன்ற மாத்திரைகளை மருத்துவர்களின் பரிந்துரை இல்லாமல் உட்கொள்ள வேண்டாம் என அறிவுறுத்தியுள்ளார்.
இதையும் படிங்க: விபத்து வழக்கில் FIR கொடுக்க லஞ்சம் கேட்ட எஸ்.ஐ சஸ்பெண்ட்..!