கிருஷ்ணகிரி மாவட்டம் ஒசூர் பகுதிகளில் நூற்றுக்கணக்கில் கிரஷர்கள், கல்குவாரிகள் செயல்பட்டு வருகின்றன. தினந்தோறும் கட்டுமான பணிகளுக்காக எம்சாண்ட், ஜல்லி ஆகியவை ஆயிரக்கணக்கான லாரிகளில் கர்நாடக மாநிலத்திற்கும் ஒசூர் சுற்று பகுதிகளுக்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

இந்தநிலையில் குவாரிகளில் வெட்டி எடுக்கப்படும் கற்களுக்கு கனமீட்டர் அடிப்படையில் அரசுக்கு பணம் செலுத்தி வந்தநிலையில், தற்போது மெட்ரிக் டன் அடிப்படையில் செலுத்த வேண்டும் எனவும் பிற மாநிலங்களில் இல்லாத வகையில் கனிம நில வரியை செலுத்த வேண்டுமென்கிற அரசின் உத்தரவை கண்டித்து ஒசூர் பகுதி, கிரஷர் உரிமையாளர்கள் தொழிலாளர்கள் என ஆயிரத்திற்கும் மேற்ப்பட்டோர் சூளகிரி அடுத்த கோனேரிப்பள்ளி என்னுமிடத்தில் பந்தல் அமைத்து காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
ஒசூர், தேன்கனிக்கோட்டை, சூளகிரி ஆகிய பகுதிகளில் உள்ள கல்குவாரி, கிரஷர், லாரி உரிமையாளர்கள், லாரி ஓட்டுநர்கள் என ஆயிரத்திற்கும் மேற்ப்பட்டோர் போராட்டத்தில் பங்கேற்றுள்ளனர்.

இதையும் படிங்க: வாட்டி வதைக்க போகும் வெயில்... ஷாக் கொடுத்த தமிழ்நாடு வெதர்மேன்!!
நூற்றுக்கணக்கான லாரிகள் நிறுத்தி வைத்திருப்பதால் கட்டுமான பணிகளுக்கான எம்சாண்ட்,ஜல்லி ஆகியவற்றின் விலை மேலும் அதிகரிக்கும் சூழல் ஏற்ப்பட்டுள்ளது. தற்போது அரசு விலை அதிகரிப்பு படி ஒருலாரி ஜல்லி 3500 ரூபாய் விற்கப்பட்டு வரும் நிலையில் 5000 முதல் 6000 ரூபாய் வரை உயரும் நிலை இருப்பதாக கூறுகின்றனர்.
இதையும் படிங்க: நான் வாங்கிய கடனை செலுத்திவிட்டேன்... வங்கிகளிடம் அறிக்கை கேட்ட விஜய் மல்லையா!!