வெயிலும் மழையும் மாறி மாறி வருவதால் பருவநிலையில் மாற்றம் ஏற்பட்ட்டுள்ளது. இதுபோன்ற காலநிலையை எதிர்கொள்ள மக்கள் சிரமப்படுகின்றனர். வெயில் சுட்டெரிப்பதால் தவித்து வருகின்றனர்.

இந்த நிலையில், தமிழகத்தில் 11 ஆம் தேதியன்று 12 மாவட்டங்களில் கனமழை பெய்யும் என கூறப்பட்டுள்ளது.
குமரி, நெல்லை, தென்காசி, தூத்துக்குடி, மயிலாடுதுறை, விருதுநகர், தஞ்சை, திருவாரூர், புதுக்கோட்டை, சிவகங்கை, ராமநாதபுரம் ஆகிய மாவட்டங்களில் கனமழை பெய்யும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: தொகுதி மறுவரையரை விவகாரம்.. மாநில முதல்வர்களுக்கு கடிதம்... சென்னையில் அடுத்த ஆலோசனை.. ஜெட் வேகத்தில் முதல்வர் ஸ்டாலின்!

மார்ச் 10, 11ம் தேதி, தமிழகம், புதுச்சேரி, காரைக்காலில், ஒருசில இடங்களில், மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது என்றும் சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில், இன்று வானம் ஓரளவு மேகமூட்டமாக காணப்படும், காலை லேசான பனி மூட்டம் காணப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

11ம் தேதி தென்தமிழக கடலோரப்பகுதிகள், மன்னார் வளைகுடா மற்றும் அதனை ஒட்டிய குமரிக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 35 முதல் 45 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 55 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும் என்பதால் மீனவர்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: உங்க உபதேசம் எங்களுக்கு தேவையில்லை அண்ணாமலை.. கனிமொழி காட்டமான பதிலடி..!