தமிழகத்தில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்து இருந்தது. அடுத்த 24 மணி நேரத்தில் தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என கூறப்பட்டது.

இந்த நிலையில், தமிழகத்தில் குறிப்பாக சென்னையில் பரவலாக கனமழை பெய்து வருகிறது. பல்லாவரம், குரோம்பேட்டை, நுங்கம்பாக்கம், வள்ளுவர் கோட்டம், கிண்டி, ஈக்காட்டுதாங்கல் , திருவொற்றியூர், ஆலந்தூர், வேளச்சேரி, கோயம்பேடு, நெற்குன்றம், போரூர், வளசரவாக்கம், ராமாபுரம் உள்ளிட்ட பல இடங்களில் கனமழை வெளுத்து வாங்கி வருகிறது.
இதையும் படிங்க: வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வு பகுதி.. நியூ வானிலை அப்டேட்..!

இதேபோல், திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி, கும்மிடிப்பூண்டி, சோழவரம், பெரியபாளையம், செங்குன்றம் உள்ளிட்ட இடங்களிலும் கனமழை பெய்து வருகிறது. மேலும், ஆவடியில் சூறைக்காற்றுடன் கனமழை பெய்து வருகிறது. மழைநீர் தேங்கியதால் பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் அவதி அடைந்துள்ளனர்.
இதையும் படிங்க: ஒரே நாளில் இவ்வளவா?... மீண்டும் ஃபார்முக்கு வந்த கோயமுத்தூர்... துள்ளி குதிக்கும் கோவை வாசிகள்...!