தமிழ்நாட்டில் பாலியல் குற்றங்கள் அதிகரித்து வருவதால் பெண் குழந்தைள் வாழ தகுதியற்ற நாடாக மாற்றி விட கூடாது என பாமக நிறுவனர் ராமதாஸ் கண்டனம் தெரிவித்துள்ளார்.
விழுப்புரம் மாவட்டம் தைலாபுரத்தில் செய்தியாளர்களை சந்தித்த அவர், தமிழ்நாட்டில் போக்சோ வழக்கு சட்டத்தின் படி 2024ம் ஆண்டில் இருந்து பதிவு செய்யப்பட்ட வழக்குகளின் மொத்த எண்ணிக்கை 6,975 ஆக அதிகரித்துள்ளது. 2023ம் ஆண்டு இதே சட்டத்தின் கீழ் 4581 வழக்குகள் பதிவாகி இருந்தது. இதை ப்பிடும் போது 52.30 சதவீத வழக்குகள் அதிகரித்துள்ளன.

தமிழ்நாட்டில் பெண் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் தொடர்ந்து அதிகரித்து வருவது அதிர்ச்சியளிக்கிறது. இத்தகைய குற்றங்களை காவல்துறையும், தமிழக அரசும் தடுக்க தவறியுள்ளது. இதை கண்டிக்கிறோம். போக்சோ சட்டம் குறித்து மக்களிடம் அதிக விழிப்புணர்வு ஏற்பட்டுள்ளது. அதனாலும் இந்த அளவுக்கு அதிகமான வழக்குகள் பதிவாகி உள்ளன. இந்த வேதனையை தங்களின் சாதனையாக மாற்றிக் கொள்ள தமிழக அரசும், காவல்துறையும் முயல கூடாது. அண்மை காலமாக பெண் குழந்தைகள் பாலியல் கொடுமைகளால் பாதிக்கப்படும் செய்து தொடர்ந்து வெளிவருகிறது.
இதையும் படிங்க: 'திமுக ஆட்சிக்கு இது அசிங்கம்…' நடிகை விவகாரத்தில் சீமானுக்கு அன்புமணி ஆதரவு..!
பள்ளிக் கூடங்கள் கூட பெண் குழந்தைகளுக்கு பாதுகாப்பற்ற இடமாக மாறியுள்ளது. குற்ற செயல்களில் ஈடுபடுவோர் மீது நடவடிக்கை எடுக்கப்படுகிறது என்ற அரசின் பதில் ஏதோ ஒரு சாக்கு சொல்வதை போல் உள்ளது. பாலியல் குற்றங்களை தடுக்க போதுமாக அளவுக்கு சட்டங்கள் உள்ளன. அவற்றை முறையாக பயன்படுத்தினால் இது போன்ற குற்றங்கள் அதிகரிப்பதை தடுக்க முடியும்.

தமிழ்நாட்டில் பெண் குழந்தைகளை பாதுகாப்பதற்கான சட்டங்களை முறையாக பயன்படுத்தவில்லை என்று பல ஆண்டுகளாக பாமக வலியுறுத்தி வருகிறது. அது உண்மை என்பதை தற்போது போக்சோ வழக்குகள் காட்டியுள்ளன. பாலியல் குற்றங்களில் கடுமையான தண்டனை மூலமே தடுக்க முடியும். ஆனால் அதை செய்ய தமிழக அரசு தவறுவதே குற்றம் பெருக காரணமாக உள்ளது. தமிழ்நாடு பெண்களுக்கும், பெண் குழந்தைகளுக்கும் வாழ தகுதியற்ற ஒரு நாடாக மாறிட கூடாது. பெண்களும் குழந்தைகளும் அச்சமின்றி நடமாடும் சூழலை தமிழக அரசு ஏற்படுத்த வேண்டும்” என்று கூறியுள்ளார்.
இதையும் படிங்க: இனியும் உங்க நாடகம் எடுபடாது.. தமிழக அரசின் பழைய ஓய்வூதிய திட்ட குழு தொடர்பாக புட்டுப் புட்டு வைத்த ராமதாஸ்.!